பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அமரபுர நிக்காயவின் பீடாதிபதி தவுல்தெனிய ஞானிஸ்ஸர தேரரின் 100 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இளம் பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சமான நிலையும் நம்பிக்கையற்ற தன்மையும் காணப்படுவதாகவும் அவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த சாசனத்தில் இணைந்துகொள்ளும் பௌத்த பிக்குகள் குறித்த அச்ச நிலை மாற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி குற்பிப்பிட்டுள்ளார்.
பௌத்த பிக்குகள் தொடர்பிலான நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது மிகவும் அவசியம் என இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவும் கலந்துகொண்டிருந்தார்.