இலங்கையை 29 ஓட்டங்களால் வீழ்த்தியது பாகிஸ்தான் !

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அணி 29 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
இலங்கைக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது 20 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ அரங்கில்   நடைபெற்றது.
இப்போட்டியில்; நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட் வீரர்களாக முக்தார் அஹமட் மற்றும் அஹமட் செயிசாட் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைப்பாட்டமாக 10 ஓட்டங்களை பெற்றிருந்த போது முக்தார் 2 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.

219003
இதனையடுத்து களமிறங்கிய முஹமட் ஹாபிஸ் 17 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். பின்னர் செயிசாடுடன் கைகோர்த்த சொயிப் நிதானமாக துடுப்பெடுத்தாட அஹமட் செயிசாட் 37 பந்துகளில் 46  ஓட்டங்களை பெற்று அரைச் சதத்தை தவற விட்டார். 
பின்னர் களமிறங்கிய உமர் அக்மால் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 24 பந்துகளில் 46  ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த அப்ரிடி 8 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
களத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய மாலிக் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை பெற்றார். அந்த வகையில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணியின் பந்து வீச்சில் திசர பெரேரா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலங்கை அணியின் இன்னிங்சை தொடர்வதற்காக களம் கண்ட குசேல் ஜனித் பெரேரா மற்றும் டில்சான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். ஜனித் பெரேரா 4, டில்சான் 6 ஓட்டங்களை பெற்று அரங்கு திரும்பினர். பின்னர் வந்த கித்துரவன் விதானகே ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இவ்வாறு ஆரம்பமே 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கிய இலங்கை அணியை மெத்தியூஸ் மற்றும் தனஞ்சிய டி சில்வா ஆகியோர் சரிவிலிருந்து மீட்டனர். இதன் போது 23 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சிறிவர்தன அதிரடியாக துடுப்பெடுத்தாடினார். மறுபுறத்தில் இருந்த டி சில்வா 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நீண்ட நாட்களுக்கு பின்னர் அணிக்கு திருப்பிய சாமர கப்புகெதர களம் கண்டார்.

218995.3
இருவரும் அதிரடியை தொடர்ந்த போதும் அது நீடிக்கவில்லை. 18 பந்துகளில்  35 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் அதிரடி ஆட்டகாரர் சிறிவர்தன. பின்னர் கப்புகெதரவுடன் இணைந்த திசர பெரேராவும் 2 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து இலங்கை அணியால் வெற்றி இலக்கை தொட முடியாமல் போனது. இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கப்புகெதர ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களை பெற்றார்.