முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக மயில் சின்னத்திற்கு வாக்களித்தால் நிச்சயம் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளைப் பெறலாம் !

சுலைமான் றாபி 

இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நாம் தனித்துப் போட்டியிடுவதில் ஒரு மர்மம் இருக்கின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளரும், முன்னாள்; தென்கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தருமான எஸ்.எம்.எம். இஸ்மாயில்  நிந்தவூரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் :

11170345_112182842460218_5431708433537139016_n

கடந்த காலங்களில் எமது சமூகத்தில் விவசாய, மீன்பிடி மற்றும் சுய தொழில் செய்பவர்கள் முதல் பாடசாலைகளில் கல்வி கற்பவர்கள் வரை அவர்கள் ஒவ்வொருத்தரும் பல்வேறு வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். கடந்த பலவருட காலமாக இப்பிரதேசங்களில் ஆட்சி செய்தவர்கள் இவற்றைப் பற்றி சிந்திக்காமல் தங்களது அபிலாஷைகளையும் பதவிகளையும் தக்கவைத்துக் கொள்வதற்கான பல வியூகங்களை வகுத்து அவர்களால் ஒரு வகை அரசியல் ஆட்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மர்ஹூம் அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியின் மூலம் எமக்கென்று ஒரு துறைமுகம், பல்கலைக்கழகம், இளைஞர்களுக்கென்று பல்வேறுவகையான தொழில் வாய்ப்புகள் என்பன வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இவற்றிலிரிந்து  நாம் விடுபட்டு தற்போது பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக் கூடியவர்களாகவும், அறியப்பட்ட எமது பிரச்சினைகளுக்கு எதுவித தீர்வுகள் இல்லாமையினாலுமே நமது சமூகம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே இவைகளை நிபர்த்தி செய்வதற்காக எமக்கென்று ஒரு மாற்று அணி வேண்டும் என்ற அடிப்படையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலமாக அம்பாறை மாவட்டத்தில் களம் இறங்கியுள்ளோம்.

அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதில் ஒரு மர்மம் இருக்கின்றது. ஏனென்றால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரசானது இம்முறை ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்ற போது இப்பிரதேசத்தில் உள்ள அவர்களின் மாற்று அணியினரை அரவணைத்துக் கொண்டு செல்ல விரும்பாத காரணத்தினால் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தலைமையிலான இந்தக் கட்சி மூலம் அம்பாறையில் தனித்துப் போட்டியிடுகின்றோம்.

எனவே இங்கு வாழுகின்ற முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக மயில் சின்னத்திற்கு வாக்களித்தால் நிச்சயம் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளைப் பெறலாம்.  இதற்காகவே நாம் மயில் சின்னத்தில் தனித்து ஒரு அணியாக களமிறங்கியிருக்கிறோம்.
இங்கு பிரதேச வாதங்களைக்களைந்து  இத்தேர்தலில் வெற்றிபெறுபவர்கள் அனைவரும் இந்த மாவட்டத்தின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்று பை-அத் செய்திருக்கிறோம் எனக் குறிப்பிட்டார்