சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் கல்முனை பிராந்தியத்துக்குட்பட்ட வைத்திய பொறுப்பதிகாரிகளை சந்தித்தார்!

1_Fotorஅபு அலா 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட ஆரசாங்க ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்திய பொறுப்பதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை (30) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ஆர்.ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன், மாகாண திணைக்கள கணக்காளர் கே.லிங்கேஸ்வரன், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர் உள்ளிட்ட பல வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

3_Fotor

குறிப்பிட்ட பணிமனையின் கீழுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையின் நடவடிக்கைகள், அதன் முன்னெற்றங்கள், அபிவிருத்தி திட்டங்கள் போன்றன பற்றியும் இந்த வைத்தியசாலைகளை இன்னும் எந்த வழியில் முன்னெற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பன பற்றி இந்த விஷேட கலந்துரையாடலில் சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ஆர்.ஸ்ரீதரன் கேட்டுக்கொண்டார்.

மேலும் இப்பணிமனையின் கீழ் இயங்கிவருகின்ற மருந்தகங்கள், வைத்தியசாலைகளின் குறைபாடுகள் பற்றியும், வேறு எந்த தேவைகள் ஏற்படுமாயின் அதன் பிரச்சினைகளை நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் நபீலிடம் எத்திவைக்கும்படியும் அதற்கான பொறுப்பதிகாரியாக இவர் இன்றைய தினம் நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் நடவடிக்கைகள் அது தொடர்பான பிரச்சினைகளை சுயாதினமாக நேரடியாக தெரிவிக்கும் வகையில் இயங்க வேண்டும் எனவும் தள வைத்தியசாலைகள் இன்னுமொரு சிறு வைத்திய நிருவனங்களுக்குக் கீழ் இயங்க முடியாது என்ற கோரிக்கையினையும் சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ஆர்.ஸ்ரீதரனிடம் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக தள வைத்தியசாலைகள் சுயாதினமாக இயங்கலாம் என்றும் சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வேண்டிக்கொண்டார்.