சு.க.ம. குழுவை ஓகஸ்ட் 7 வரை கூட முடியாது !

rulesஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி, அக்கட்சியின் மத்தியக்குழுவை கூட்டுவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 07ஆம் திகதி வரை நீடிக்க, மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.