புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமையை திருத்துவேன் – மகிந்த

Mahinda-Rajapaksa_2827824b_11ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வென்றால் புதிய அரசியலமைப்பும் தேர்தல் முறை சீர்திருத்தங்களும் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஹெவ்லொக் பார்க்கில் அமைந்துள்ள ஹென்டி பேதிரிஸ் விளையாட்டு மைதானத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பொருளாதாரம், வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், வர்த்தகம், கைத்தொழில், வெளிநாட்டு கொள்கை, கலைகலாசாரம், இளைஞர், சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான கொள்கைகள், தேசிய இறைமையை பலப்படுத்தல், இனங்களுக்கிடையேயான சமாதானம் என்பவை தொடர்பான திட்டங்களை 9 அம்ச  விஞ்ஞாபனம் மூலம் அமுலாக்கவுள்ளேன் என அவர் கூறினார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டவை குறுகிய-நீண்ட கால அடிப்படையில் அமுலாக்கப்படும். இது ஆறுமாதங்கள் தொடக்கம் 5 வருடங்கள் வரை இருக்கும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  நான் ஏன் மீண்டும் அரசியலுக்கு வந்தேன் என கேட்கின்றார். நாடு எங்குமுள்ள மக்கள் கேட்டதாலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் கேட்டதாலுமே நான் மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளளேன். 2009  இல் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்ட நாட்டை காப்பாற்றுமாறு மக்கள் கேட்டனர். அவர்கள் வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுவதை நிறுத்தும்படி கேட்டனர். மக்கள் தமக்கு உதவியில்லை என என்னை அழைத்தனர். அவர்களுக்கு போக்கிடம் இன்றி காணப்பட்டது.

2005 இல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் விஞ்ஞாபத்தை வெளியிட்டபோது பொது ஆதரவாளர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயந்து பயந்து வந்தார்கள். இப்போது வடக்கில் கண்ணிவெடி புதைக்கப்பட்டிருந்த இடங்களில் வெங்காய உற்பத்தி செய்யப்படுகின்றது.

வீதி வலையமைப்புகள் ஆக்கப்பட்டமையால் காலையில் ஹம்பாந்தோட்டையிலும் மதியம் கொழும்பிலும் மாலையில் யாழ்ப்பாணத்திலும் பிரசாரக் கூட்டங்களை நடத்த முடிக்கின்றது.

இந்த அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கம் தொடங்கிய 58,000 அபிவிருத்தி திட்டங்கள் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தால் தடைப்பட்டுள்ளன.

சிறு, நடுத்தர, பாரிய செயற்றிட்டங்கள் நிறுத்தப்பட்டதால் 105 மில்லியன் மக்கள் வேலையிழந்துள்ளனர். நாடு 25 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு போய்விட்டது.

உலகில் சுத்தமான நகரங்களில் ஒன்றாக இருந்த கொழும்பு குப்பை கொட்டும் இடமாக மாறி துர்நாற்றம் வீசுகின்றது.
புதிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கம் இளைஞர்களுக்கு புதியதோர் உலகத்தை வழங்கும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த விஞ்ஞாபனத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார்.

விஞ்ஞாபனத்தில் முதல் பிரதி தென் மாகாண சங்க நாயக்கர் வண. பல்லதற சுமணஜோதி மற்றும் வண. வெலமிடடியாவ சுமணஜோதி நாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டது