நான் அரசியலில் நுழைவதற்கு காரணம் எனது அரசியல் தந்தை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல என மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார் குறிப்பிட்டார்.
இன்று அக்குரணை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அவர் உரையாற்றுகையில் மேலும் கருத்துவெளியிட்ட அவர் நான் பொலன்னறுவையில் தேர்தல் பிரசார வேலைகளுக்காக சென்றிருந்த போது லகஷ்மன் கிரியல்ல அவர்கள் நீங்கள் தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என கேட்டார் நானும் நீங்கள் விரும்பினால் நான் தயார் என குறிப்பிட்டேன் .
அப்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக அவர் அவர் உறுதியளித்தார் சிங்கள பெரும்பான்மை ஒருவருக்கு வழங்க ஐக்கிய தேசிய கட்சி வைத்திருந்த ஒரு வாய்ப்பை எனக்காக அமைச்சர் கிரியல்ல பெற்றுத்தந்தார்.அவர் வாக்களித்தல் அதனை கட்டாயம் நிறைவேற்றும் கொள்கையுடையவர் என குறிப்பிட்ட லாபிர் ஹாஜியார்.
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சினைகள் வந்த போது அன்று எமது முஸ்லிம் அமைச்சர்கள் மவுனமாக இருந்த போது முஸ்லிம்களுக்காக தைரியமாக பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தவர் எனது அரசியல் தந்தை லக்ஸ்மன் கிரியல்ல அவர்களே என மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார் குறிப்பிட்டார்.