அஹமட் இர்ஸாட்
சிதறியடிகப்பட்டுள்லா கல்குடாவின் அரசியல் கலாச்சாரத்தினை மாற்றியமைக்கும் முகமாக பொது நிதியம் ஒன்று உறுவகப்பட்டு எனக்கு அரசியலில் சலுகைகள் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானங்களையும் அதில் சேமிப்புச் செய்து மசூறா அடிப்படையில் சமூகத்தின் தேவைக்காக செலவு செய்யப்படும் அதே நேரத்தில் கல்குடாவின் அரசியல் கலாச்சாரத்தினை ஏனைய மாவட்டங்களுக்கும் பிரதேசங்களுக்கும் படிப்பினையை பெற்றுக்கொடுக்கக் கூடிய அரசியல் கலாச்சாரமாக மாற்றியமைப்பதே எனது திட்டத்தில் மிக முக்கியமான திட்டமாக உள்ளது என பொதுத்தேர்தலில் கல்குடா தொகுதியை மையப்படுத்தி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடுகின்ற புதுமுக வேட்பாளர் றியால் மீராவோடையில் 27.07.2015 திங்கட் கிழமை மாலை இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய கணக்காளர்., நான் மாற்றியமைக்கப் போகும் அரசியல் கலாச்சாரத்தினால் எதிர் வரும் காலங்களில் எமது பிரதேசத்திலிருந்து படித்தவர்களும், புத்திஜீவிகளும் அரசியலில் பயமின்றி வேட்பாளர்களாக களமிறங்குவதற்கு முன் வருவார்கள் என்பது முக்கிய விடயமாக காணப்படும். அத்தோடு எனது வெற்றிக்கு பிற்பாடு முன்னெடுக்கப்படுக்கின்ற முக்கிய அபிவிருத்தி திட்டமாக பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி, மீன்பிடி, விவசாயம், அத்தோடு மக்களினுடைய தொழிலில் நஸ்டம் ஏற்படா வன்னம் இருப்பதற்கக இஸ்லாமிய காப்புறுதி, கடனுதவிகளை வழங்கும் நிதி நிறுவனங்களை நிறுவதோடு மாவட்டத்தில் முதன்மை பாடசலையாக எமது பிரதேசத்தில் இருக்கின்ற பாடசாலையினை தரமுயர்த்தப்படும் அதே நேரத்தில் மட்டக்களப்பு வைத்திசாலைக்கு அடுத்தபடியாக எமது பிரதேசத்தில் இருக்கின்ற வைத்தியசாலையானது சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்படும்.
தான் இத்தேர்தலில் போட்டியிடுகின்றமையானது இப்பிரதேசத்தில் இருக்கின்ற அரசியல்வாதியான அமீர் அலியுடன் போட்டியிட்டு அவரினை தோற்கடிப்பதற்காக அல்ல. அமீர் அலி இப்பிரதேசத்திற்கு அதிகமான அபிவிருத்திகளை செய்துள்ளார். அதற்காக அவரை நான் பாராட்டி மதிக்கின்ற அதேவெலை அமீர் அலி பிரதேசத்திற்கு எதிராக ஏதாவது காரியங்களை செய்துள்ளார் என்பது பற்றி தான் நேரடியாக கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. ஆகவே வருக்கின்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைத் தழுவும் அதே நேரத்தில் வெற்றி பெறும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் தான் பாராளுமன்ற செல்லும் வாய்ப்பினை பெற்றால் காலாகாலமாக பிரதிநித்திதுவப்படுத்திய அரசியல்வாதிகளினால் புறக்கணிக்கப்பட்ட கல்குடாவினை முதலில் அபிவிருத்தி செய்துவிட்டு அதற்குப் பிற்பாடு மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் பணியினை முன்னெடுப்பேன் என தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஃமான், வேட்பாளர்களான அலிசாஹிர் மெளலான, சிப்லி பாரூக், காங்கிரசின் கொள்கைபரப்புச் செயலாளர் முபீன், பிரதி அதிபரான சமீம், முன்னாள் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான அன்வர், முஹாஜிரீன் ஆகியோர்களும் உரையாற்றினார்கள்