ஜனவரி 8ஆம் திகதி புரட்சி பின்நோக்கிச் செல்லுமாயின், மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் உருவாகும். அரச குடும்பங்கள் சுவர்கத்துக்கும் பொதுமக்கள், நரகத்தை விட மோசமான ராஜபக்ஷ பாதாளத்துக்கும் தள்ளப்பட்டுவிடுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யட்டியாந்தோட்டையில் நேற்று திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
‘ஜனவரி 8 புரட்சி தொடர்ந்து கொண்டுசெல்லப்படுமாயின் வெள்ளை வான் கலாசாரம் இருக்காது. போதைப்பொருட்கள் இருக்காது, வன்புணர்வுகள் இடம்பெறாது. வேலைவாய்ப்பு இருக்கும். பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். விவசாயம் அபிவிருத்தியடையும்’ என்றார்.
‘புதிய நாட்டையே நாம் கோருகின்றோம். புதிய கிராமத்தைக் கோருகின்றோம். அதற்காக, எதிர்வரும் 7ஆம் திகதியன்று எங்களுக்கு மக்கள் ஆணையை வழங்குமாறு கோருகின்றோம்’ என பிரதமர் மேலும் கூறினார்.