இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் கப்பல் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது .
இந்த விடயம் தொடர்பில் துறைமுக அதிகாரிகளிடம் கலந்துரையாடப்படுவதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சசி தனதுங்க தெரிவித்துள்ளார் .
கப்பல் சேவைக்கு தேவையான சுங்கம் உள்ளிட்ட ஏனைய துறைசார் உத்தியோகஸ்தர்களை இணைத்து கொள்ளவது தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகள் கட்டணம் தொடர்பில் இது வரையில் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயணிகள் எண்ணிக்கை மற்றும் பரிமாற்றத்திற்குட்படும் பொருட்களின் அளவு என்பனவற்றை அடிப்படையாக கொண்டே கப்பல் சேவைக்கான பண அறவீடு தொடர்பில் அறிவிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.