மு.காவின் பாலமுனை மத்திய குழுவினரின் முறையற்ற தெரிவும், புணரமைப்பு

அபு அலா –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுவினருக்கும், அமைப்பாளருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக ஏற்பட்ட சிக்கல் நிலைமையை போக்கும் முகமாக பாலமுனை மத்திய குழுவினரை மீண்டும் புணரமைக்கும் நிகழ்வு  முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தலைமையில் இடம்பெற்றது.

பாலமுனை மாவட்ட வைத்தியசாலை அருகாமையில் இடம்பெற்ற இந்த மத்திய குழு அமைக்கும் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை மாநகர சபை பிரதி மேயர் முழக்கம் மஜீட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான பைசால் காசிம், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் வேட்பாளருமான எம்.ஐ.எம்.மன்சூர், மு.காவின் உச்சபீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் உள்ளிட்ட பல கலந்துகொண்டனர்.

குறிப்பிட்ட அதிதிகளின் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழு புணரமைக்கும் நிகழ்வு எவ்வித பிரச்சனைகளுமின்றி மிக சுமுகமான முறையில் தெரிவு இடம்பெற்றது.

கடந்த காலங்களில் பாலமுனை மத்திய குழுவில் அங்கம் வகித்த தலைவர் ஐ.எல்.சுலைமாலெப்பை, செயலாளர் எம்.ஏ.சதாத், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கும், பாலமுனை அமைப்பாளர் முன்னாள் அட்டாளைச்சேனை தவிசாளர் எம்.ஏ.அன்ஸிலுக்குமிடையில் ஏற்பட்ட பல கருத்து முரண்பாடுகள் காரணமாக குறிப்பிட்ட நபர்களை விலக்கி மிக அவசரமான முறையில் புதிய மத்திய குழு நிருவாகத்தினரை பாலமுனை அமைப்பாளர் முன்னாள் அட்டாளைச்சேனை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தெரிவு செய்து வந்ததை பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் எதிர்த்து வந்தமையும், இந்த பிரச்சினையை போக்கும் முகமாகவே இந்த மத்திய குழுவினரை புணரமைக்கும் நிகழ்வு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

image