மைத்திரி ஜனாதிபதி பதவிப்பெருமானம் எடுத்த காட்சிகள் ஒரு நாட்டியம்போன்று எனக்கு தென்பட்டது -முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா

imageஅஷ்ரப் ஏ சமத்

மைத்திரி – ரணில் ஒர் அச்சாரு அரசாங்கமாகும். நான் பிரதம நீதியரசராக இருக்கும் போது 2 ஜனாதிபதிகள் என் முன் சத்தியப்பிரமானம் எடுத்தாா்கள். அது ஒரு கம்பீரமான முறையில் நடந்தது. உலக நாடுகளிலும் இதுவே ஒரு சம்பிரதாய முறையாகும்

ஆனால் ்இந்த மைத்திரி ஜனாதிபதி பதவிப்பெருமானம் எடுத்த காட்சிகள் ஒரு நாட்டியம்போன்று எனக்கு தென்பட்டது. என முன்னாள் பிரதம நீதியரசா் சரத் என் சில்வா தெரிவித்தாா்

நேற்று கொழும்பு நுாலக கேட்போா் கூடத்தில் மகிந்த ராஜபக்ச ஆதரவான சிங்கள கலைஞா்கள் ஒன்று கூடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தாா.

ஜனாதிபதியாக முன்பே அவா் பிரதம நீதியரசா் ஒருவரைக் கொண்டு வந்து சத்தியப் பிரமானம் செய்தாா். அவ்விடத்திலேயே 45 பாரளுமன்ற உறுப்பிணா்களைக் கொண்ட ரணிலுக்கு பிரதமா் பதவியை வழங்கினாா். ஆனால் 125க்கும் மேற்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினா் இருக்கும்போது ரணிலும் வலுக்கட்டாயத்தின் பேரில் அவா் பிரதமர் ஆணாா்.

இந்த அரசாங்கம் இப்படியே விட்டுவிட்டால் நாட்டுக்கு பாரிய இழப்பாகும். என்று தான் நான் உடன் மஹிந்த ராஜபக்சவை அழைத்து நீங்கள் ஹம்பாந்தோட்டையில் உள்ள மெதமுள்ள வீட்டில் போய் இருந்தால் உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும்.
ரணில் பொலிஸ் தடுப்பை பிரிவை ஏற்படுத்தி உங்களது குடும்பம் உண்னையும் பிடிச்சி சிறைக்குள் போட்டுவிடுவாா். உடன் தோ்தலில் குதித்து நாட்டை கைப்பற்றி நல்லமுறையில் ஆட்சியைக் கொண்டு சொல்லுங்கள் என்று மகிந்தவிடம் கூறினேன்.

மத்திய வங்கி ஆளுனா் அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை அவா் 15 பில்லியன் ருபா அவரது மறுமகனுக்கு பினை வழங்கி மோசடி செய்துள்ளாா். அவரை நியமித்த ஜனதிபதியே நீங்க வேண்டும். அதுதான் சட்டம்.
ஆனால் மத்திய வங்கி மற்றும் முக்கிய நிறுவனங்கனை பிரதம மந்திரியின் கீழ் கொண்டு வந்துள்ளாா். பிரதம மந்திிரி ஒருபோதும் சட்டத்திற்கு முரணாக நிதி மோசடி பொலிஸ் விசாரனைப் பிரிவை ஒன்றை ஏற்படுத்த முடியாது. இதனை ஏற்படுத்திய முறை பற்றி நாம் உயா் நீதிமன்றம் சென்றால் பொலஸ் மாஅதிபரும் பிரதம மந்திரி ரணிலும் தான் பதில் சொல்ல வேண்டும். 300க்கும் அதிகமான அரச அதிகாரிகள் அங்கு விசாரனைக்கு நாளுக்கு நாள் விசாரனைக்குட்படுத்துகின்றனா்.
பிரித்தாணிய சட்டத்தின் படி நுாற்றாண்டுகளாக பொலிஸ் மற்றும் சி.ஜ.டி விசாரனை நீதிமன்றம் முறைமை இலங்கையில் இருக்கும்போது இவ்வாறு ஒரு பொலிஸ் நிதி மோசடி விசரனை பிரிவை ரணில் ஏற்படுத்த முடியாது. அதனை பாதுகாப்பு அமைச்சா் ஜனாதிபதியால் மட்டுமே சட்டத்தினை ஏற்படுத்தி அமைக்க முடியும்.

இந்த நாட்டில் முன்னைய ஜனாதிபதி முன்எடுத்த 59 வெளிநாட்டு திட்டங்களை பிரதமா் நிறுத்தியுள்ளாா். இதற்கு சர்வதேச ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை அவா்கள் நிறுத்தியமைக்கு சர்வதேச வழக்குச் செய்தால் நஸ்ட ஈட்டினை ரணில் வழங்க வேண்டி ஏற்படும்.
உலக நாடுகளில் தலைவா்கள் கட்சிகள் மாறினாலு் ஒருபோதும் அந்த நா்ட்டில் நடைமுறையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்தாமல் அவா்கள் முன்னெடுப்பாா்கள். இதனால் உலகிலும், இலங்கையிலும் வியாபாரிகள், ஒப்பந்தக் காராகள் அதன் தொழிலாளாிகள் தான் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள். மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக எடுக்கும் ஒவ்வொரு வழக்கும் நான் வாதாடினால் அவைகள் தோல்வியுறும். அதனை நான் செய்வேன்.
இந்த நாட்டில் சிறுபான்மை பாராளுமன்ற கொண்ட கட்சி எப்படி ஆளும் அரசாங்கமாக மாறும். இதுவே முதலில் ஜனாதிபதி மைத்திரி செய்த முதல் தவறாகும்.