அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்திலிருந்து பிரதேச வாதத்தினை உடைத்தெரியும். முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில்.

imageஅஹமட் இர்ஸாட்

அஹமட் இர்ஸாட்:- மாகாணத்திலும் அகில இலங்கை ரீதியிலும் பல்கலைக்கழக உபவேந்தராக இருந்து கல்வித்துரையில் பிரபல்யமன நீங்கள் அரசியலுக்குள் புதுமுகமாக நுளைந்துள்ளது சம்பந்தமாக உங்களுடைய பிரதேச மக்களுக்கும் நாட்டுமக்களுக்கும் எங்களுடைய பத்திரிகையின் ஊடாக உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தினை தர முடியுமா?

உப வேந்தர்:- சம்பந்துரையினை பூர்வீகமாக கொண்ட நான் அங்கே தனது ஆரம்ப கல்வியினை மேற்கொண்டதற்கு பிற்பாடு முன்னாள் சோவியற் குடியரசிலே பல்கலைக்கழக கல்வியினை ஆரம்பித்து எனது முதுமானி பட்டத்தினையும், கலாநிதி பட்டத்தினையும் அங்கேயே பெற்றுக்கொண்டேன். அதற்குப் பிற்பாடு தென்கிழக்கு பல்கலை கழகத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக இணைந்து பல வருடங்காலாக அப்பதவியில் இருந்து பலபதவி உயர்வுகளையும் பெற்று சுனாமி அனர்தத்திற்கு பிற்பாடு பிரித்தானிய பல்கலைக்கழகத்தின் அனுசரணையுடன் பொதுநலவாய நாடுகளுக்கான புலமைப்பரிசில் பெற்று கலாநிதிக்குப் பிற்பாடு கற்கைநெறி எனும் மேலதீக கற்கையினை பூர்த்தி செய்து விட்டு தென்கிழக்கு பல்லகலைக்கழகத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராகவும் உபவேந்தராக ஆறு வருடங்கள் கடமையாற்றியுள்ளேன்.

அஹமட் இர்ஸாட்:- சம்மாந்துறையில் அரசியல் ஜாம்பவானாக மூன்று தசாப்தகாலாமக இருந்த மர்ஹூம் அஹமட் அலியார் முகம்மட் அப்துல் மஜீட்டின் மறைவுக்கு பிற்பாடு 1994ம் ஆண்டு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதிக்கத்தை சம்மாந்துறையில் கையில் எடுத்து சம்ந்துறை பிரதேசமானது அரசியல் அனாதையாக்கப்பட்டு வருவதாக கூறப்படுக்கின்ற குற்றச்சாட்டினை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

உப வேந்தர்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வருகைக்கு பிற்பாடு சம்மாந்துரையில் பல்வேறுபட்ட அரசியல் தளம்பல்கள் ஏற்பட்டுள்ளதனை எல்லோரும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். பொருளியல் துறையில் நிபுனத்துவம் பெற்ற எங்களது முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மர்ஹும் பி.ஏ.மஜீட் தனது அரசிய சானக்கியத்தினாலும் திறமையினாலும் சம்மாந்துறை பிரதேசத்திற்கு கட்சிவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டும், ஒட்டு மொத்த சமூகத்தின் ஒற்றுமையுடன் பல முக்கிய சேவைகளை எமது பிரதேசத்திற்கு செய்துள்ளார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் எப்போது இங்கு காலூன்ற தொடங்கியதோ அன்றிலிருந்து இன்று வரைக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் கொடுக்கப்படுகின்ற வாக்குறுதிகள் நிரைவேற்றப்படாமலே இருந்து வருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் மர்ஹும் அப்துல் மஜீட் கட்டிப்பாதுகாத்து வந்த சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் ரீதியான ஒற்றுமையும் உடைத்தெரியப்பட்டும், அரசியல் தலைமைத்துவங்கள் தவிடு பொடியாக்கப்பட்டும் சம்மாந்துறையின் அரசியல் கலாச்சாரமும், இஸ்தீரதன்மையும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என்றே என்னால் கூறமுடியும். இதுவும் நான் தேர்தலில் களமிறங்குவதற்கு முக்கிய காரணமாகும்.

அஹமட் இர்ஸாட்:-சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூலமாக சம்மாந்துரையின் பிரதி நிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறும் நீங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலமாக நீங்கள் போட்டியிடுவதனால் சம்மாந்துரையின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா?

உப வேந்தர்:- முதற்தடவையாக அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களமிறங்கி முக்கிய மூன்று வேட்பாளர்களுடன் பத்து பிரதி நிதிகளை களமிறக்கி சம்மாந்துறையினை தொகுதி ரீதியக மட்டும் மையப்படுத்தாமல் அம்பாறை மாவட்டதின் கரையோரப்பகுதிக்கான பிரதிநிதிகளை வென்றெடுக்க வேண்டும் என்பதினையே முக்கிய கருப்பொருளாக கொண்டு எமது புதிய அரசியல் கலாச்சாரத்தினை முன்னெடுத்து வருக்கின்றோம். அத்தோடு நானும் சம்மாந்துரையினை மட்டும் மையப்படுத்தாமல் அம்பாறை மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதி நிதியாக செயற்படுவதற்காகவே இக்களத்தில் இறங்கியுள்ளேன். அந்த அடிப்படையில் வருக்கின்ற பொதுத்தேர்தலில் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்வோம் என்பது வேட்பு மனுவினை தாக்கள் செய்யும் பொழுதே உறுதிப்படுத்தப்பட்ட விடயமாக இங்கு இருப்பதனை எதிர்தரப்பினர் கூட ஏற்றுக்கொள்ளும் அதே சமபத்தில் நாங்களும் எமது மக்களும் இரண்டு ஆசணங்களை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அதிதீவிரமாக செயற்பட்டு வருக்கின்றோம்.

அஹமட் இர்ஸாட்:- தனக்கென ஒரு வாக்கு வங்கியினை வைத்திருக்கும் முன்னாள் சம்மாந்துரை பிரதேச சபை தவிசாளர் நெளசாட் மஜீட் இம்முறை அரசியலில் அமைதியாக இருக்கும் நிலையில் அவருடைய ஆதரவாளர்களின் ஆதரவும் அவருடைய ஒத்துளைப்பும் உக்களுக்கு இருக்கின்றதா?

உப வேந்தர்:- பொதுவாக சம்மாந்துறையில் இருக்கின்ற எதிர்த்தரப்புக்களின் அதிகமானோர் என்னை ஆதரிப்பதற்காக முன்வந்துள்ளனர். அதிலும் முக்கியமாக முன்னாள் தவிசாளர் நெளசாட் அவருடைய பூரண ஆதரவினையும் அவருடைய ஆதரவாளர்களின் ஒத்துளைப்பினையும் எனக்கு வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். அந்த வகையிலே அவருடைய ஆதரவும் அரவணைப்பும் எங்களின் வெற்றியினை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:- சிறீலங்கா முச்லிம் காங்கிரசின் மூலமாக களமிறங்கி சம்மாந்துறையின் பிரதி நிதித்துவத்தை தக்கவைக்கலாம் என்ற நிலைப்பட்டினை நீங்கள் எடுக்காமைக்கான காரணம் என்ன?

உப வேந்தர்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முலமாக களமிறங்கி எமது பிரதேசத்தின் பிரதி நிதித்துவத்தினை தக்கவைக்கலாம் என்ற ஆசை பலருக்கு இருந்து வந்தது. ஆனால் அவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு கணவு காண்பதைப் போலவே அக்ட்சியில் இருந்து வந்துள்ளனர். அதனால் மக்களுக்கு குரல் கொடுக்கின்ற சேவையாற்றுகின்ற அமைச்சரான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாட் பதுர்டீன் தலையின் கீழ் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் இம்முறை முஸ்லிம் காங்கிரசை ஒதுக்கிவிட்டு அமைச்சர் றிசாட்டுடன் கைகோர்த்துள்ளோம்.

அஹமட் இர்ஸாட்:- அதிக வாக்குகளை வைத்திருக்கும் சம்மாந்துறை தொகுதியானது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இழந்து வரும் சந்தர்ப்பத்தில் குறைவான வாக்குகளை வைத்திருக்கும் கல்முனை ஒரு உறுப்பினரையும் பொத்துவில் தொகுதியானது மூன்று உறுப்பினர்களையும் தொடர்ந் தேர்ச்சியாக தக்கவைத்து வருவதினை நீங்கள் ஒரு கல்விமான் என்ற ரீதியில் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

உப வேந்தர்:- இதுதான் எமது சமகால அரசியல் திட்டத்தில் காணப்படுக்கின்ற பாரிய குறைபாடாகும். சிறீலங்கா முஸ்லிம் கங்கிரசின் தோற்றப்பாட்டிற்கு பிற்பாடு பிரதேச ரீதியாக எங்களுடைய பிரதிநிதி எனக்கூறிகொண்டு மக்கள் மத்தியில் பிரிவினையினை ஏற்படுத்திவிடார்கள்.. பிரதேச ரீதியாக பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டு பிரதேசத்தின் பிரதிநிதிகள் இழக்கப்படுவதனால் அரசியல் ரீதியாக குறிப்பிட்ட மக்களின் அபிலாசைகளே இல்லாதொழிக்கப்படுக்கின்றது என்பதை மக்கள் தெளிவாக சிந்திக்க தொடங்கிவிட்டனர். அதற்கான தகுந்த பாடம் இம்முறை தெர்தலில் இவ்வாறான பிரச்சனைக்கு மக்கள் மூலமாக கற்பிக்கப்படும் என்ற நம்பிக்கையுடனே எங்களது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருக்கின்றோம்.

அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய கட்சியில் முக்கிய வேட்பாளராக களமிறங்கியுள்ள சீறாஸ் மீராசாஹிபின் கல்முனை முதல்வர் பதவியியானது பறிக்கபப்ட்டதனால் பிரதேசத்தில் பிரதேசவாதம் தலைதூகியுள்ளது எனக் கூறப்படுக்கின்றமைக்கு வித்திட்டவர்கள் யாரென நீங்கள் நினைக்கின்றீர்கள்??

உப வேந்தர்:-இப்பிரதேச வாதத்தினை பார்க்கின்ற பொழுது அன்மைக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரச்சனையாகவே இதனை பார்க்கின்றேன். தொகுதி ரீதியான தேர்தல் முறைமை காணப்படுக்கின்ற காலத்தில் மக்கள் மத்தியில் இவ்வாறான தொரு பிரதேசவாதத்தினை தூண்டுக்கின்ற நிலைமை காணப்படவில்லை. மாவட்ட ரீதியிலான தேர்தல் முறைமையோடு முக்கியமாக முஸ்லிம் காங்கிரசானது அம்பாறை மாவட்டம் மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணதிலேயே வித்தியாசமான அரசியல் அனுகுமுறைமைகளை கையாண்டபடியினால் பிரதேசவாதற்திற்கு வித்திட்டுள்ளது என்பது எனது கருத்தாகும். அதனை புத்திஜீவிகளும் மதப்பெரியோர்களும் ஏற்றுக்கொண்டுள்ள உண்மையான விடயமாகவும் காணப்படுக்கின்ற அதே சமயம் அகில இலங்கை மக்கள் காங்கிரசானது அம்பாறை மாவட்ட பிரதேசங்களில் இருந்து பிரதேசவாதத்தினை முற்றாக உடைத்தெரியும் என்பதனையும் தெரிவித்துக் கொள்ள விரும்புக்கின்றேன். .

அஹமட் இர்ஸாட்:- நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக வரும்பட்சத்தில் நீங்கள் உபவேந்தராக இருந்த தென்கிழக்கு பல்கலைகழத்திற்கு எதைச் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?

உப வேந்தர்:- நான் உபவேந்த்ராக இருந்த காலகட்டத்தில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கல்வி நடவடிக்கைகள், விளையாட்டு , விரிவுரையாளர்கள் நலன் என பல்வேறுபட்ட முனெடுப்புக்களைச் செய்துள்ளேன். ஆனால் எதிர்காலத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்திற்கு வைத்திய பீடமும், இளம்பட்டதாரிகள் மிகக்கூடிய விரைவில் வேலை வாய்ப்புக்களை பெறக்கூடிய வகையில் புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்கப்பட வேண்டிய தேவைப்பாடு நிலவிவருக்கின்றது. அவற்றினை எனக்கு இன்சா அல்லாஹ் பாராளுமன்ற செல்லும் வாய்புகிடைக்குமானால் எனது கட்சித்தலைமையின் உதவியோடு முதற்கட்ட நடவடிக்கையாக அதனை செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:-தேர்தல் காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் பேசப்படும் கரையோர மாவட்ட கோரிக்கையினை நீங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றீர்கள்?

உப வேந்தர்:- அரசியல் ரீதியாக உரிமைகளை வெண்றெடுக்க முயற்சிக்கின்றோம் என்பதனை காட்டுவதற்காக மக்களுக்கு முஸ்லிம் காங்கிரசினால் தேர்தல் காலங்களில் காட்டப்படுக்கின்ற கண்கட்டிவித்தையாகும். கரையோர மாவட்ட பிரசனையினையும் விடவும் அம்பாறை மாவட்ட மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய அடிப்படை பிரச்சனைகளான இளைஞர்களுகான வேலையினை, காணிப்பிரச்சனை, விவசாயிகள் எதிர் நோக்குகின்ற பிரச்சனை, அதே போன்று ஒவ்வொரு துறையினருக்கும் பல முக்கிய பிரச்சனைகள் இருக்கின்றன. முதலில் அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும் அரசியல் முன்னெடுப்புக்களில் ஈடுபட வேண்டும். என்பதே எனது கருத்தாகவும் எனது அரசியல் நடவடிக்கையாக இருக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புக்கின்றேன்.

அஹமட் இர்ஸாட்:- கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் மன்சூரினை எதிர்த்து போட்டியிட்டு உங்களால் வெற்றி பெற முடியும் என்ற நபிக்கை உங்களுக்கு இருக்கின்றதா?

உப வேந்தர்:- இதற்காக குறுகிய பதிலினையே உங்களுக்கு கூற விரும்புக்கின்றேன். அதாவது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வருகையினை பொதுமக்களாகிய நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் என பொது மக்களிடம் வினவிப்பாருங்கள் இதற்கான விடையினை பெற்றுக்கொள்வீர்கள்.

அஹமட் இர்ஸாட்:- முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர்களான பெருந்தலைவர் மர்ஹூம் அஸ்ரப் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர்களுக்கிடையிலான வேறுபாட்டினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீகள்?

உப வேந்தர்:- பெருந்தலைவர் அஸ்ரப் முஸ்லிம் காங்கிரசினை ஆரம்பிக்கின்ற பொழுது கிழக்கு மாகானத்த்கினை மையப்படுத்திய தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். அவருக்கு இப்பிரதேசத்தின் மண்வாசனை, மற்றும் மக்கள் நாளாந்தம் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள்,அதனோடு பிரதேச மக்களின் எவ்வாறான தேவைகள் இருக்கின்றது என்பதனை நன்கறிந்தவராக காணப்பட்டார். அதனால் இப்பிரதேசத்தின் நலனினை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகம், துறைமுகம் என முக்கியமான தேவைப்படுகளை ஆரம்பித்து வைத்தார். ஒட்டுமொத்தமாக சமூகத்தின் நலனினை கருத்தில் கொண்டவராக காணப்பட்டார். தற்போதைய தலைமைத்துவமான ரவூப் ஹக்கீம் பிரதேசத்தின் மீது அக்கறை அற்ற தலைமைத்துவமாகவும், தனது அரசியல் அபிலாசைகளையும், அரசியல் மூலமாக நண்மைகளையும் அடைந்து கொள்ளும் தலைமையாக காணப்படுவதனை மிக முக்கியமான வேறுபாடாக நான் பார்க்கின்றேன்.

அஹமட் இர்ஸாட்:- வருக்கின்ற பொதுத்தேர்தல் சம்பந்தமாக உங்களுடைய பிரதேச ஆதரவாளர்களுக்கும் மாவட்டத்தின் வாக்காளர்களுக்கும் எமது பத்திரிகையின் ஊடாக எதை கூற விரும்புக்கின்றீர்கள்?

உப வேந்தர்:- குறிப்பாக இப்பிரதேசத்தில் செல்வாக்கு செலுத்திய சிறீலங்கா முச்லிம் காங்கிரஸ், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் மக்களுக்கு எதுவித் ஆணைகளையும் வழங்காமல் மக்களிடம் இருந்து ஆணைகளை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரசானது மக்களின் ஆணையினை பேற்றுக்கொள்வதோடு அதனை தனது அரசியல் ஆயுதமாக பயண்படுத்தி சம்பாந்துறை மக்களின் அரசியல் அபிலசைகளை என்னூடாக நிறைவேறும் என்பதனை எனது பிரதேசமக்களுக்கு உறுதிப்பட குறிக்கொள்வதோடு, எனது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றினையும் வெளியிட தீர்மானித்துள்ளேன். தேர்தல் முடிவடைந்து எனக்கு பாராளுமன்றம் செல்கின்ற வாய்ப்பினை இறைவன் தருவானேயானால் என்னால் எனது விஞ்ஞாபத்தில் குறிப்பிடப்ப்பட்ட அறுபது வீத நடவடிக்களை கூட செயற்படுத்த தவறும் பட்சத்தில் தான் பாராளுமன்ற கதிரைக்கு தகுயற்றவன் என்பதனை எனது பிரதேச மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.