வெற்றிலைக்கு மட்டுமன்றி பொருத்தமானவர்களுக்கு வாக்களியுங்கள் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கோரியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச வீட்டில் இருந்து கொண்டே வழக்குத் தீர்ப்புக்களை எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
நாடாளுமன்றில் குற்றப் பிரேரணை கொண்டு வந்து பெரும்பான்மை வாக்குகளினால் பணி நீக்கப்பட்ட பிரதம நீதியரசரை நாடாளுமன்றிற்கு அறிவிக்காமல் மீண்டும் பதவியில் அமர்த்தி ஓய்வுறுத்தப்பட்டுள்ளார்.
இந்த விடயம் நல்லாட்சியாகுமா? கூட்டமைப்பின் 130 உறுப்பினர்களையேனும் நியமிக்க வேண்டும்.
ஆகஸ்ட் மாதம் 18 முதல் 19ம் திகதி அளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்வதனைப் போன்று ரணிலை பிரதமராக்க எமது கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் சென்றால் என்ன செய்வது?
எமது கட்சியின் 25 முதல் 30 வரையிலான உறுப்பினர்கள் இவ்வாறு செல்லக்கூடும்.
இதனால் வெற்றிலைக்கு வாக்களிப்பது மட்டும் போதுமானதல்ல மஹிந்தவுடன் இருப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டியது அவசியமானது என சமல் ராஜபக்ஸ தங்காலையில் தெரிவித்துள்ளார்.