திருகோணமலை நகரசபைக்கு முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை !

முதலமைச்சர் ஊடகப்பிரிவு

திருகோணமலை நகரசபையால் வழங்கப்பட்ட காணிகளுக்கான ஆதன வரிகளை காணி உரிமையாளர்களான மக்களின் பெயரிலேயே அறவிடுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உள்ளுராட்சி மன்ற அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களால் திருகோணமலை நகரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இன்று காலை 11 மணியளவில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி அவர்களின் தலைமையில் காந்திநகர் சுலோட்கவுஸ் கஸ்தூரிநகர் ஆகிய கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னால் நகரசபை உறுப்பினர் கா.கோகுல்ராஜ் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றுடன் முதலமைச்சர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்தரையாடலின் போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் நகரசபை செயலாளர் ஆகியோர் 1947 ம் ஆண்ட முதல் அக்கிராமங்களில் வாழ்ந்த வரும் மக்களுக்கு 1995 ம் ஆண்மு முன்னால் நகரசபை தலைவர் பி.சூரியமுர்த்தி அவர்களால் காணிகள் அளவிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தது இருப்பினும் அப் போது மின்சாரம் மற்றும் கடிநீர் அணைப்புக்களை வழங்கவே அவர்களால் வழங்கப்பட்ட ஆவணம் செல்லுபடியானதாக அமைந்திருந்தது.

அதன் பின்னர் முன்னால் நகரசபை தலைவர் ச.கௌரிமுகுந்தன் அவர்களுடைய காலத்தில் 576 பேருக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டு அவை காணி பதிவாளர் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்டு நகரசபை பதிவேட்டிலும் பதியப்பட்டது..
இக்காணிக்கான நகரசபையால் அறவிட வேண்டிய வரிகளை சிலரிடம் நகரசபையின் பெயரிலேயே நகரசபை அறவிட்டு வந்தனர் இச்சந்தர்பத்திலேயே மிக நிண்ட காலமாக இழுபரி நிலையில் இருந்து வந்த இப்பிரச்சினை சம்மந்தப்பட்ட அமைச்சரான முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தமையை இட்டு இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.