மஹ்ரூப் ஜகான்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஐக்கிய தேசிய முன்னணியில் அம்பாரை மாவட்டத்தில் களமிறக்கப்பட்ட எம்.ஐ.எம்.மன்சூர், எம்.சீ.பைசால் காசீம், எம்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்கள் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு சாய்ந்தமருது சீபிரீஸ் ஹோட்டலி;ல் ஏற்பாடாகியிருந்தது.
இந்நிலையில் வேட்பாளர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொள்ளவில்லையே அவரிடமும் கேட்பதற்கு வினாக்கள் இருக்கின்றன என ஊடகவியலாளர் கேட்க வேட்பாளர் ஹரீஸ் வந்து கொண்டிருக்கின்றார் என பதிலளிக்க அவரின் வருகைக்காக ஊடகவியலாளர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, பாராளுமன்ற வேட்பாளராக களமிறக்கிய இந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியளர்களை காத்துக் கொண்டு இருக்க வைப்பவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் இவரின் நிலை எவ்வாறு காணப்படும் மற்றும் ஏற்கனேவே மூன்று வேட்பாளர்களும் இணைந்து தானே நேரத்தை குறித்தீர்கள் இவ்வாறு கதைத்துக் கொண்டிருந்த நிலையில் மன்சூர் உள்ளே நுழைந்தார்.
மாநாடு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நேரம் தாமத்தித்து வந்தமையால் ஊடகவியளர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டனர். வெளியேற முற்பட்டனர். இருந்த போதிலும் ஒருவாறாக ஏனைய இரு வேட்பாளர்களினதும் சமாளிப்பினால் ஊடகவியலாளர்கள் அமர்ந்து கொண்டனர் இருந்த போதிலும் பெரிதாக வேட்பாளர் மன்சூரை கணக்கெடுக்கவில்லை.
கடந்த வாரத்திற்கு முதல் கிழக்கு மாகாண சபையில் சுகாதார அமைச்சராக இருந்தீர்கள் அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளும், பல்வேறு குறைபாடுகளும் காணப்பட்டது அதாவது தேர்தல் நெருங்கிய நிலையில் சுகாதார அமைச்சில் நியமனங்கள் வழங்கப்பட்டன அது சிபாரிசு அடிப்படையிலும், கோட்டா அடிப்படையிலும் வழங்கப்பட்டதாகவும் அதில் பல பலவருடங்களாக தற்காலிக ஊழியர்களாக வைத்தியாலையில் கடமையாற்றிய ஊழியர்கள் குறிப்பாக பெண்கள் தகைமை இருந்தும் புறக்கணிக்கப்பட்டதாக குறிப்பிட்டு அண்மையில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது இது பற்றி என்ன குறிப்பிடுகின்றீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு எம்.ஐ.எம்.மன்சூர் தண்ணீர் அருந்தி அருந்திக் கொண்டு நிதானமாக பதிலளிக்கையில் சுகாதார அமைச்சை பொறுத்த வரையில் நியாயமான முறையில் சரியாக நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றியவர்களின் விபரங்கள் கடந்த 7 வருடங்களாக சுகாதார அமைச்சில் எந்த பதிவுகளும் இடம்பெறவில்லை எனவும் ஏற்கனவே 7 வருடங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சு எந்த தற்காலிக ஊழியர்களையும் இணைத்து கொள்ளக்கூடாது என அறிவிப்பு செய்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் புதிய நியமனம் வழங்கிய பின்னர் தற்காலிக ஊழியர்கள் இருப்பதாக செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. தற்போது அமைச்சு அவர்களுடைய கேரிக்கையை ஏற்று இவ்வாறானவர்களை மீள்பரிசீலனை செய்து சுகாதார அமைச்சு நியாயமான தீர்ப்பு வழங்கும் என தான் நம்புவதாக மேலும் தெரிவித்தார்.