தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளரான அபூபக்கர் றமீஸ் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து கலாநிதி பட்டம் பெற்று வெளியேறினார்!

கடந்த 2015-07-13 ம் தகதி சிங்கப்பூரில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் போது தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளரான அபூபக்கர் றமீஸ் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டார்.
மிஸ்கீன்பாவாஅபூபக்கர், உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோரின் புதல்வரான இவர் சாய்ந்தமருது 07 ம் குறிச்சியை சேர்ந்தவர். தனது ஆரம்பக்கல்வியை அல் ஜலால் மகாவித்தியாலயத்திலும், இரண்டாம் நிலைக்கல்வியை கல்முனை சாஹிறா தேசியபாடசாலையிலும் கற்ற இவர் 1997 ம்ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2000-2004 ஆண்டு வரைதனது கீழ்நிலைபட்டப்படிப்பை சமூகவியல் விசேடதுறையில் கற்ற இவர், 2004 ம் ஆண்டு அதிவிஷேட முதலாம்தரச்சித்தியை பெற்று தனது தற்காலிக விரிவுரையாளர் நியமனத்தை பெற்றார். 2006 ம் ஆண்டு நிரந்தர சமூகவியல்விரிவுரையாளரான இவர், தனது பட்ட மேற்படிப்பை பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் மேற்கொண்டார். “சுனாமியும், அனர்த்தநிவாரணமும்” எனும் தலைப்பில் தனது ஆய்வை மேற்கொண்டு, 2010 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பட்டமேற்படிப்பை வெற்றிகரமாகமுடித்தார். அத்தோடு அதே ஆண்டு 8ம்மாதம் சிங்கப்பூர் தேசியபல்கலைக்கழகத்தின் ஆய்வு புலமைப்பரிசிலை பெற்று கொண்டு தனது கலாநிதி பட்டப்படிப்பிற்காக சிங்கப்பூர்சென்றார். சுமார் 4 வருட பட்டப்படிப்பைமேற்கொண்டு இறுதியில் “இலங்கை மலே முஸ்லிம்களின் இனத்துவ அடையாளமும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும்” எனும் தலைப்பில் தனது கலாநிதி ஆய்வை வெற்றிகரமாகமேற்கொண்டு அண்மையில் அப்பல்கலைக்கழகத்தில் நடந்தபட்ட மளிப்புவிழாவில் கலாநிதிபட்டம் பெற்று வெளியேறினார்.

சமூக, பொருளாதார, அரசியல் விடயங்களில் அதிக அக்கறையும், ஆய்வுகளையும் மேற்கொள்ளும் இவர், இலங்கையிலுள்ள சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிககுறைந்த எண்ணிக்கையிலான சமூகவியலாளர்களுள் ஒருவராக கருதப்படுகிறார்.