
தற்போது இப் பிரதேச மக்களுக்கு அரசியலில் ஒரு பாரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை நாம் எல்லோரும் அறிவோம் . இதை அறிந்த நான் இதற்கான மூல காரணம் இற்றுப் போன அரசியல் வாதிகளைப் புறம் தள்ளி பட்டுப் போன காலத்துக்கு ஒவ்வாத கோசம்களை களைந்தெறிந்து நம் சமூகத்தில் இலை மறை காய் களாகவுள்ள அறிவு வளம் பெற்றுள்ள சிந்தனை வாதிகளான இளைஞ்சர்களை தட்டி எழுப்புவதுதான் ஒரே வழி என அறிந்தேன் , இதன் அடிப்படையில் தான் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி என்ற பேரில் ஒரு கட்சியை அமைத்தேன்.அறிமுகப் படுத்தும் போதே பல தூசனைகளும் மன வேதனைகளும் அடங்கிய மக்கள் கருத்துக்கள் என்னை வந்தடைந்து என்னை மேலும் மேலும் உற்சாகப் படுத்தியதே தவிர எனது கொள்கையில் இருந்து அணுவளவும் வலு இழக்கச் செய்யவில்லை , தற்போது இக் கட்சி அமைப்பு ஒரு சாதனையாக பர்ணமித்து சில ஆய்ரக் கணக்கானா இளைஜர்கள் கட்சியில் பதிந்துள்ளார்கள் அதே நம்பிக்கையின் அடிப்படையில் தேர்தல் களத்தில் குதிக்கும் நிலையை எட்டியுள்ளது .இப் பயணம் எமது கட்சியின் பொருளாதரக் கொள்கைகளை அடையும் வரை துணிந்து போராடும் அத்துடன் நம் சமூதாய இளைஜர்களைக் தட்டி எழுப்பி அவர்களிடம் இக் கட்சி கையளிக்கப் படும் என்பதை இங்கு நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்
இப் பொதுத் தேர்தலில் நம் சமூகம் ஒட்டகச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் நீங்கள் ஒரு மறு மலர்ச்சியான அரசியல் போக்கில் கால்வைக்க முடியும் என திட நம்பிக்கை என்னில் உண்டு . மறு மலர்ச்சி உங்கள் கையில் தான் உள்ளது . இம்முறை சிந்தித்து செயல் படுவோம்