ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கிங்ஸ்லி பிரணாந்துவின் வீட்டிலிருந்த 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.