யஹ்யாகான் தலைமையில் சாய்ந்தமருதில் கலந்துரையாடல்!

 

எம்.வை.அமீர்

எதிர்வரும் பொதுத்தேர்தலை எதிர்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நியமிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை வெற்றியடைய வைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 2015-07-14 ல் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளரும் நகரஅபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள ஒனாளி ஹோல்டிங் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஏ.சீ.யஹ்யாகான் அவர்களது சாய்ந்தமருது இல்லத்தில் இடம்பெற்றது.

யஹ்யாகானுடைய இல்லத்தில் குழுமிய கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது, சாய்ந்தமருதில் தற்போது ஏற்பட்டுள்ள சில வெற்றிடங்களை தான் உள்ளிட்ட கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களினதும் மத்திய குழுவினதும் பங்களிப்புடன் நிவர்த்திப்போம் என்றும் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுத்தந்தே ஆகும் என்றும் அதற்க்கான முன்னகர்வுகளை கட்சி மேற்கொண்டுள்ளது என்றும் அண்மையில் தான் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய செய்தி தொடர்பில் ஏற்பட்ட சந்தேகமான ‘தேர்தலுக்கு பின்னரே உள்ளுராட்சி சபையை தருவோம்’ என்று சம்மந்தப்பட்ட அமைச்சர் கூறியதாக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள், பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட பிரமுகர்களை சந்தித்த போது கூறியதானது தான் ஏற்கனவே கூறிய கருத்தை உண்மைப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். குறித்த சந்திப்பின்போது சாய்ந்தமருது ஜும்மாப்பள்ளி வாசலின் தலைவர் அவர்கள் நடந்துகொண்ட நடுநிலையான முறையானது, ஜும்மாப்பள்ளி வாசலின் தலைவர் அவர்கள் மீது மிகுந்த மகிழ்ச்சியையும் மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தலைவரின் குறித்த உரையானது மெச்சத்தக்கது என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை மற்றும் அபிவிருத்திகள் விடயத்தில் தலைவர் சாய்ந்தமருது மக்களுக்கு பகிரங்க ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கட்சி ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த யஹ்யாகான் குறித்த ஒப்புதலை தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் ஏற்கனவே வழங்கிவிட்டதாகவும் மீண்டுமொருமுறை தலைவர் பகிரங்கமாக அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது என்றும் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றிக்காக ஏ.சீ.யஹ்யாகான் அவர்களது தலைமையில் செயற்படுவது என்றும் விசுவாசபிரமாணம் மேற்கொள்ளப்பட்டதுடன் கூடிய விரைவில் கட்சிப்போராளிகளின் ஒரு குழுவினர் தலைவரை சந்தித்து சில விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

1_Fotor 2_Fotor n a_Fotor 3_Fotor ,