வேட்புமனுத் தாக்கல் நண்பகல் 12 மணியுடன் நிறைவு !

 Election

 எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகள் அனைத்தும் இன்றைய தினம் நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன.

பிரதான அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களை நாடு பூராகவும் உள்ள மாவட்ட செயலக அலுவலகங்களில் கையளித்திருந்தன.

ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன கொழும்பு மாவட்ட செயலகத்தில் தமது வேட்பு மனுக்களை கையளித்தன.

 

 அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு , ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி மாத்றை மாவட்டத்தில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இன்றைய தினம் மாத்தளை மாவட்ட செயவகத்தில் புதிய சிஹல உறுமய வேட்பு மனுத் தாக்கல் செய்தது.

சில பிரதான கட்சிகள் நுவரெலியா மாவட்டத்தில் வேட்பு மனுக்களை இன்றைய தினம் தாக்கல் செய்திருந்தன.

ஜனநாயகக்கட்சியும் நுவரெலியாவில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தது.

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, முன்னிலை சோஷலிச கட்சி, சோஷலிச கட்சி , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் , ஜனசெத பெரமுன மற்றும் ஒக்கம ரஜவரு ஒக்கம வசியோ உட்பட பல கட்சிகள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.

31 சுயேட்சைக் குழுக்களும் கண்டி மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன.
வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான இறுதித்தினமான இன்று புத்தளம் மாவட்டத்தில் ஜனசெத பெரமுண வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தது.