கிழக்கில் தேங்கிக் கிடக்கும் பாரிய அபிவிருத்திகளான
வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு (பட்டதாரிகள் உட்பட) வெளிநாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்களைத் தடுத்து சுயதொழில் வழங்கள் போன்றவற்றுடன் கிழக்கில் செய்யப்படவிருக்கின்ற பாரிய அபிவிருத்திப் பணிகளை என் ஆட்சியில் செய்து முடிக்கும்வரை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதிடம் பொதுத்தேர்தல் பற்றி கருத்துக்கூறுகையில்:
நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலில் என்னைக் களமிறங்குமாறு என் நண்பர்களும், ஆதரவாளர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர். கிழக்கு மாகாண மக்களின் கோரிக்கை கருதியும், இங்குள்ள அபிவிருத்தி கருதியும் நான் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கினேன். ஆனால் இத்தேர்தலானது நல்லாட்சியின் பார்வையில் முக்கியம் வாய்ந்த தேர்தலாகும். ஒவ்வொரு பொதுமகனும் சிறந்த முறையில் சிந்தித்து தங்களின் வாக்குரிமைகளைப் பாவிக்க வேண்டும்.
மீண்டும் இந்த நாட்டில் கடந்த கால நிலமைகள் தலைதூக்க விடாமல் நாமடைந்திருக்கும் நல்லாட்சியை மேலும் மெருகூட்டி நாட்டில், வீட்டில் ஒவ்வொரு பொதுமகனும் சந்தோஷமாக தங்கள் குடும்பங்களுடன் வாழவேண்டும் அந்த நிலமை என்றும் இந்நாட்டில் இருக்கவேண்டும். இனமத வேறுபாடுகளற்ற ஆட்சி சிறப்பாக இந்நாட்டில் நடைபெற வேண்டுமென்பதே எனது ஆவலாகும்.
அந்த வகையில் இத்தேர்தலில் புதியவர்களுக்கு இடமளித்து கிழக்கில் தேங்கிக் கிடக்கும் முக்கிய அபிவிருத்திகளை மூவினமக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக முன்னெடுத்து செய்து முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறேன்.
அந்தவகையில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடும் நான் சார்ந்த கட்சி வேட்பாளர்களுக்கு எனதும் எனது ஆதரவாளர்களின் ஆதரவும் சிறப்பாகக் கிடைக்கும், என்பதில் எந்தச்சந்தேகமுமில்லை. பிரச்சாரத்திலும் ஈடுபட தயாராகைருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் சமாதானமும், அமைதியும் மேலோங்க எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் இந்த தேர்தலில் முகம்கொடுக்குமாறு சகல வேட்பாளர்களையும் பொதுமக்களையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்றவகையில் கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்தார்.