ரணில் – ராஜித்த , ரணில் – அத்துரலிய தேரர்கள் இடையில் முக்கியத்துவமிக்க ஒப்பந்தம் !

43_Fotor
அஸ்ரப்  ஏ சமத்
இன்று காலை 11.00 மணிக்கு அலரி மாளிகையில்  வெவ்வேறாக இரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.  முதலாவது சிகல உருமைய கட்சித் தேரர் அத்துரலியத் தேரர்,  பாட்டலி  – ரணில் விக்கிரமசிங்கவுக்கும்ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து வந்த அமைச்சர் ராஜித்த, அர்ஜன ரணதுங்க, எம்.ரி.எஸ் குணவர் த்தன, பிரதியமைச்சர் ஏல் குணசேகர, ஹிருணிக்கா,  ஆகியோர்கள் கொண்ட குழுவுக்கு தலைமைதாங்கி  ராஜித்த, ரணில் விக்கிரமிசிங்கவுக்குமிடையிலான ஓப்பந்தம் கைச்சாதிடப்பட்டது.

33_Fotor
13 பேர்  ஜக்கிய மக்கள் முன்னணியில் வருவதாகச் சொல்லி நேற்று ராஜித்த சொல்லியிருந்தார் ஆனால் 7 பேர் இன்று வருகைதந்திருந்தனர் . இவ் 7 பேரும் ஜ.தே.கட்சியில் கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடுகின்றனர் . வேட்பு மனுவிலும் கைச்சாத்திட்டனர் .  (அததுரலியத தேரர் , பாட்டலி சம்பிக்க ராஜித்த சோனாரத்தின, ஏல் குணசோகர, எம்.ரீ.எஸ் குணவர்தன, ஹிருனிக்கா )
இதில் சாட்சிகளாகவே  ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், மனோ கனேசனும் கையெழுத்திட்டனர் .
35_Fotorரணில் இங்கு உரையாற்றுகையில்  இவ்வாறானதொரு கட்சிகள் எல்லாம் சேர்ந்து தான் ஜனவரி 8 ஆம திகதி  இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைக் கொண்டுவந்தோம்.

அதே போன்று ஆகஸ்ட் 16ஆம் திகதியும் இபோன்றதொரு நல்லட்சியை பாராளுமன்த்திலும் ஏற்படுத்துவோம்  மீண்டும் ராஜபக்ச கல்வர்கள் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர் .  அவர்களை தோற்கடித்து இந்த கல்வர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.  என கூறினார் .

ராஜித்த, சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம் , மனோ கனேசன் ஆகியோறும் இங்கு உரையாற்றினார்கள்.

36_Fotor 39_Fotor