அஸ்ரப் ஏ சமத்
எனது மனைவி ஒரு முஸ்லீம் பாத்திமா ரவி கருநாயக்க எனக்கு முஸ்லீம்களது மத,தொழுகை கலை கலாச்சார விடயங்களும் அனைத்தும் தெரியும். ஆனால் கடந்த கால அரசு பள்ளிவாசல்களை முஸ்லீமகளது கலை கலாச்சார விடயங்களை சீரலித்தது. அந்த யுகத்தை மீள வரமுடியாமல் நாம் தடுக்க வேண்டும்.
அது மட்டுமா முஸ்லீம்களது வார்த்தகத்தையும் சீரலித்தார்கள். முஸ்லீம் ஒருவார் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்தால் கூடுதலான சுங்கத் தீர்வை மற்றும் இடைஞ்சல்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் நான் நிதி யமைச்சராக வந்த பிறகு முஸ்லீம்களுக்கு தமது வியாபாரத்தை செய்வதற்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது. என நிதியமைச்சர் ரவி கருநாயக்க தெரிவித்தார்.
தெஹிவளை பீரிஸ் பிளேசில் உள்ள தாருல் அக்ரம் மத்ரசாவில் இன்று (11) இப்தார் நிகழ்வில் நிதியமைச்சரும் ஜ.தே.கட்சி உப தலைவருமான ரவி கருநாயக்க கலந்து கொண்டார்.
அத்துடன் இந்த மத்ரசா கூட தொழுகை நடாத்த முடியாமல் மத்ரசாகவே இயங்கி வருகின்றது. கடந்த காலத்தில் சிலர் முறையிட்டதனால் இந் நிலையில் உள்ள தாகவும் அமைச்சருக்கு அஸ்ரப் ஹூசைன் விளக்கிக் கூறினார்.
அத்துடன் மெலவிமார்களுக்கு பெருநாள் பணப்பரிசில்களும் அன்பளிப்புக்களும் அமைச்சர் ரவியினால் வழங்கி வைக்கப்பட்டது.