பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்குள் தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டார்.
தற்காலிக அடையாள அட்டைகள் மாவட்ட செயலகத்தினால் மாத்திரம் விநியோகிக்கப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்