த.மு.கூட்டமைப்பு ஐ.தே.கா.வுடன் இணைந்து நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டி !

article_1436532455-1 

 

 எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் 9 பேர் போட்டியிடவுள்ளதாக கூட்டணி அறிவித்துள்ளது. நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில்  மேற்படி 9 பேரும் போட்டியிடுகின்றனர்.

 கூட்டணி வேட்பாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழமை(10) வேட்புமனுவில் கையொப்பமிட்டனர். 

   நுவரெலியா மாவட்டத்தில்  தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.ராதாகிருஸ்ணன், தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் எம்.திலகராஜ் ஆகியோரும் கண்டி மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவர் வேலுக்குமார், பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளர் ஏ.அரவிந்குமாரும் போட்டியிடவுள்ளனர்.

 இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியினதும் தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் தலைவர் மனோகணேசன், ஜனநாயக மக்கள் முன்னணி உப செயலாளர் சண்.குகவரதன், இரத்தினபுரி மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் எம்.சந்திரகுமார் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி கம்பஹா மாவட்ட செயலாளார் எஸ.சசிகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.