விம்பிள்டன் டெனிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு பிரித்தானியாவின் அண்டி மரே தகுதி !

 Andy Murray v Roger Federer

 விம்பிள்டன் டெனிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு பிரித்தானியாவின் அண்டி மரே தகுதி பெற்றுள்ளார்.

ஏழு வருடங்களுக்கு பின்னர் விம்பிள்டன் போட்டியில் இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார்.

கனேடிய வீரரான வசெக் பொஸ்பிஸிலுக்கு எதிராக விளையாடி அண்டி மரே வெற்றி பெற்றுள்ளார்.

உலகின் மூன்றாம் நிலை வீரரான அண்டி மரே போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயற்பட்டார்.

போட்டியின் முதல் சுற்றை 6-4 என வெற்றி கொண்ட மரே இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுகளை 7-5 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.

இந்த போட்டியின் போது இரு தடவை மழை குறிக்கிட்ட போதிலும் கூரை மைதானத்தில் போட்டி இடம்பெற்றது.

28 வயதான மரே உலகின் 56 ஆம் நிலை வீரரான பொஸ்பிஸிலை நேர் செட் கணக்கில் வெற்றி கொண்டார்.

இந்த சுற்றின் வெற்றியின் மூலம் அரையிறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை வீரரான ரொஜர் பெடரரை மரே சந்திக்கின்றார்.