அம்பாறை ஜ.தே.கட்சி அமைப்பாளர் தயா கமகே சிங்கள ஊடகங்களில் முஸ்லீம் காங்கிரஸ் பற்றி மிக மோசமாக விமர்சித்துள்ளார். அவர் நேற்று சிங்கள வானொலி நெத் எப் .எமில் தெரிவித்த கருத்து
முஸ்லீம் காங்கரஸ் இனவாதத்தை துண்டியே அவர்கள் அவர்களுக்குரிய பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் தனித்துக் கேட்க வேண்டும். ஒரு ஆசனம் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும். அவர்களை மக்கள் ஆதரிக்க தாயார்ல்லை .அதற்காகவே இம்முறையும் அரசியல் ஆதரவு ஒட்சிசனைப் பெற்றுக்கொள்ளவே இம்முறையும் ஜ.தே.கட்சியுடன் இணைந்து செயல்பட முனைகின்றனர். அம்பாறையில் ஜ.தே.கட்சி தனித்துக் கேட்டால் அம்பாறையில் 3 எம்.பிக்களை பெற்றுக்கொள்ளலாம்.
அதனால் அவர்கள் தனித்துக் கேட்பதேயே நான் விரும்புகின்றேன்.
கடந்தமுறை 4 பேரை பெற்றுக்கொண்டு தேசியப்பட்டியலும் பெற்றார்கள். கண்டியில் ரவுப் ஹக்கீம் அத்துடன் அவருடன் மைத்துனர்சிலீப்பிங் வேட்பாளரைப் நிறுத்தினார் . முஸ்லீம் காங்கிரஸ் ஒரு இனவாதி கட்சி. என தயா கமகே தெரிவித்தர்.