சுலைமான் றாபி
நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பினரின் ஏற்பாட்டில் நிந்தவூரில் காணப்படும் 13 விளையாட்டுக் கழகங்களையும், அதன் வீரர்களையும் ஊக்குவிப்பற்காக அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், இப்தார் நிகழ்வும் அதன் தலைவர் ஐ.எல்.எம். இப்றாஹிம் தலைமையில் நிந்தவூர் அல் – மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையில் இன்று (07) இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி. ஜப்பார் அலி அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ் அஹமட், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜுதீன், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எல்.எம். சலீம், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. கலந்தர், நிந்தவூர் அல் – மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல்.நிஜாமுதீன், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி ஏ.எம். றிபாய் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக நிந்தவூரில் இருந்து முதன்முதலாக “முப்தி” பட்டம் பெற்ற மௌலவி எச்.எம். மின்ஹாஜ், கிரிக்கெட் போட்டிகளின் தேசிய ரீதியில் தங்கப்பதக்கம் வென்ற என். நிக்சி அஹமட், எஸ்.எம். ஆரிப் ஆகியோர்கள் அதிதிகளால் ஞாபகச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் சேவையினைப் பாராட்டி இவ்வமைப்பினரால் ஞாபகச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.