(எம்.ஐ.எம்.றியாஸ்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் தலா 75000.00 பண ஒதுக்கீடுகளை இன்று அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் கழகம் மற்றும் இறக்காமம் விளையாட்டுக் கழககங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கீடுகள் செய்யுள்ளதை இன்று தெரிவித்தார்.
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கார்கில் புட் சிட்டி எப்.ஏ.கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் மூன்றாவது தெரிவின் குழுப் போட்டியில் அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இறக்காமம் ஐ.ஆர்.எப்.சீ.அணியினரை எதிர்த்து அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக்கழக அணி விளையாடியதில் ஆட்ட நேர முடிவில் இரு கழகங்களும் தலா ஒரு கோல் வீதம் போட்டதனால் பின்னர் பேனாடிக் அடிப்படையில் 3 -1 என்ற அடிப்படையில் சுப்பர் சொனிக் கழகம் வெற்றி பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயகல விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றசீன்,அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.ஏ.முனாப்,அனைத்து விளையாட்டு கழக சம்மேளனத்தலைவர் ஹம்சா சனுாஸ்,அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ்,அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட செயலாளர் அதிபர் எம்.பீ.செயினுலாப்தீன்,ஆசிரியர் ஹாறுான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பிரதி அதிபர் ஏ.எல்.பத்தாஹ் தலைமையில் சுப்பர் சொனிக் கழகத்தின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு செய்யபட்ட வீரா்கள் இதன் போது பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை உறுபடபினர் ஏ.எல்.எம்.நஸீரினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.