புதுப்பொலிவு பெறுகிறது சாய்ந்தமருது தாமரைக்குளம்!

Thaamarai (1)_Fotor
அஸ்லம் எஸ்.மௌலானா
நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் சல்பீநியாக்கள் பெருகியுள்ள சாய்ந்தமருது தாமரைக்குளத்தை சுத்தமாக்கும் பணி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அண்மையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் பிரதி முதல்வர் மஜீத் விடுத்த வேண்டுகோளை ஏற்று நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் பேரில் காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை, மல்ஹர் சம்ஸ் மகா வித்தியாலயம், பொது நூலகம், விதாதா வள நிலையம், சமுர்த்தி வங்கி உட்பட குடியிருப்புகளும் சூழ்ந்துள்ள இத்தாமரைக் குளம் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து கோல் எனும் சர்வதேச அரசசார்பாற்ற நிறுவனத்தினால் புனரமைப்பு செய்யப்பட்ட போதிலும் அதன் பின்னர் அது பராமரிக்கப்படவுமில்லை சுத்தம் செய்யப்படவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Thaamarai (2)_Fotor