அமெரிக்காவில் விமானத்தை ஏற்றிச்சென்ற ரயில் ஒன்றின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதால், அதில் ஏற்றிச்செல்லப்பட்ட விமான பாகங்கள் ஆற்றில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள போயிங் விமான நிலையத்தின் வாஷிங்டன் தொழிற்சாலைக்கு ரயில் மூலம் விமானத்தின் பாகங்களை ஏற்றிச்சென்ற ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டது. இந்த சோக சம்பவம் Montana மாகாணத்தை உள்ள ஆற்றிங்கரையோரத்தில் நடந்தது. இந்த ஆற்றில் விமானத்தின் பாகங்கள் விழுந்தது.
மொத்தம் 11 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலின் ஏழு பெட்டிகளில் விமானத்தின் பாகங்கள் இருந்தன. ஒரு பெட்டியில் ஆல்கஹாலும், மற்றொரு பெட்டியில் சோயாபீன்ஸும் இருந்துள்ளன. இதில் விமான பாகங்கள் இருந்த மூன்று பெட்டிகள் மட்டும் தடம்புரண்டு கவிழ்ந்தது. மற்ற பெட்டிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆற்றில் விழுந்த விமானபாகங்கள் போயிங் 737,777,747 விமான வகைகளுக்கு சொந்தமானது. ஆற்றில் விழுந்த விமானத்தின் பாகங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் விமான பாகங்களை மீட்க மீட்புப்படையினர் மிகவும் கஷ்டப்பட்டனர். இந்த விபத்து காரணமாக இந்த பகுதி வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாகவும், பின்னர் மீட்புப்பணிகள் முடிந்தபின்னர் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும்,
Montana Rail Link spokeswoman Linda Frost அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து Montana போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.