பிரான்ஸும் ஜெர்மனியும் அரசியல் அழுத்தங்களை கொடுத்திருந்ததாக ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர் குற்றம்சாட்டியுள்ளார் !

 65659

ரஷ்யாவுக்கும் கத்தாருக்கும் 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பளிப்பதற்கு ஆதரவாக பிரான்ஸும் ஜெர்மனியும் அரசியல் அழுத்தங்களை கொடுத்திருந்ததாக ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

போட்டியை நடத்தும் நாடுகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்புக்கு முன்னதாக, பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சார்க்கோஸி-உம் ஜெர்மனிய அதிபர் கிறிஸ்டியன் வூல்ஃப்-உம் தங்கள் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்ததாக ஜெர்மனிய நாளிதழ் ஒன்றுக்கு பிளாட்டர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் புலனாய்வுத் துறையினர் ஊழல்குற்றச்சாட்டில் விசாரித்துவரும் செப் பிளாட்டர், தனது கட்டுப்பாட்டில் நடக்காத ஒரு விடயத்துக்கான பழியை ஏற்று தான் களைப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.