தொழில்நுட்ப புரட்சியால் – குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப புரட்சியால் இன்று உலகம் என்பது நமது உள்ளங்கை நெல்லிக்கனியாக சுருங்கிப் போய் விட்டது.
அதிலும் செல்போன்கள் ஏற்படுத்திய பெரும் புரட்சியானது, கடிகாரம், நாட்காட்டி, திசைகாட்டி, தபால் செய்திகள், கமராக்கள் உள்ளிட்ட பல முக்கிய கண்டுபிடிப்புகளை ஒன்றும் இல்லாமல் ஆக்கி, விடை கொடுத்து வழியனுப்பி வைத்து விட்டது. இதன் உச்சகட்ட பரிணாம வளர்ச்சியான ‘ஸ்மார்ட் போன்’ தற்போது பல்வேறு துறைகளில் பேராதிக்கம் செலுத்தி வருகின்றது.
மனிதர்களின் இரத்தம், சிறுநீர், உமிழ்நீர், வியர்வை மற்றும் மூச்சுக்காற்றை வைத்தே அவர்களது நோய் அறிகுறிகளை கண்டுபிடிக்ககூடிய வல்லமை வாய்ந்த செயலிகளை வடிவமைத்துவரும் மருத்துவ ஆய்வாளர்கள், இந்த ‘பயோ சென்சிங்’ செயலிகளை ஸ்மார்ட் போன்களில் பொருத்துவதன் மூலம் நீரிழிவு நோய் மற்றும் கர்ப்பத்துக்கான அறிகுறிகளை இனி கண்டுபிடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.