நம்முடைய வாக்குகள் எதன் பொருட்டும், எவர் பொருட்டும் விற்பனைக்கு உரியவை இல்லை !

10408833_10152902491014668_133779882296045705_n
அன்புக்கினிய வாக்காளப் பெருமக்களே… நண்பர்களே
எப்படியாவது அதிகார நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்ள ஓர் அணியும், இழந்த நாற்காலியை மீண்டும் அடைவதற்கு மற்றோர் அணியும் உங்களுக்கு ஆயிரம் வாக்குறுதிகளைஅள்ளிவிடும். 
 
 மதுப் புட்டிகள் உங்கள் மடியில் தாமாக வந்து விழும். பிரியாணிப் பொட்டலங்கள் வீடு தேடி வரும். 1,000 போய் நோட்டுகள் தேர்தல் ஆணைஆளரையும் தாண்டி உங்கள் கதவிடுக்குகளில் கண் சிமிட்டும். நம்முடையவாக்குகள் எதன் பொருட்டும், எவர் பொருட்டும் விற்பனைக்கு உரியவை இல்லை என்பதை இந்த மலினமான நாற்காலி மனிதர்களுக்கு இந்தத் தேர்தலில் நாம்உணர்த்த முற்படுவோம்.
அரசியல்வாதிகளுக்குக் குறைந்தபட்ச அச்சம் வாக்காளர்​களிடம்எழுவதற்காகவாவது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நிகழவேண்டும். அப்போதுதான் மூச்சைத் திணறச் செய்யும் ஊழல் நாற்றம்ஓரளவாவது குறையும். மக்களை சிறு சம்பள உயர்வுகளால் தற்காலிக பொருள்விலை குறைப்பினால் எளிதில் ஏமாற்றிவிட முடியாது என்பதை அவர்கள்உணரும் வாய்ப்பு உருவாகும். 
சிறு சம்பள உயர்வுகளால்  தற்காலிக பொருள் விலை குறைப்பினால் இலவசத் திட்டங்களால் நம் ஏழ்மை அகலாது. இந்த திட்டங்களால் யாருக்குஎன்ன நன்மை?
நாம் பிச்சை இடுபவர்களே தவிர, பிச்சைக்காரர்கள் இல்லை என்ற பெருமிதத்துடன் வாக்குச் சாவடிக்குச் செல்வோம். ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கு அடித்தளம் அமைக்கப் புறப்படுவோம். வெயில் அடித்தால்,வியர்வை வழியும். மழை பொழிந்தால், மேனி நனையும் என்று தயங்கி, வீட்டில்இருந்தபடி தொலைக்காட்சியில் நாம் தொலைந்து​போனால், நட்டம் நமக்கே.
இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா  பொதுத் தேர்தல் பற்றி கேள்வி எழுப்பியதுக்கு தனது கருத்தைக்  கூறினார்.