இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ?

article-2255743-16B7C024000005DC-691_634x424_Fotor

_58958083_celebration_2002_Fotor

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் பிளட்சரின் பதவிக்காலம் உலகக் கோப்பையுடன் முடிவடைந்து விட்டது. புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மும்முராக ஈடுபட்டுள்ளது. இதில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பெயர் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா, கங்குலியிடம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இத்தகவலை டால்மியாவும், கங்குலியும் மறுத்துள்ளனர். பிசிசிஐ அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘பயிற்சியாளர் பதவிக்கு கங்குலியின் பெயர் முதலிடத்தில் உள்ளது. அவர் இல்லாவிட்டால் ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம்’ என்றும் கூறுகின்றனர். வரும் 25ம் தேதி நடக்க உள்ள பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.ராக சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் பிளட்சரின் பதவிக்காலம் உலகக் கோப்பையுடன் முடிவடைந்து விட்டது. புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மும்முராக ஈடுபட்டுள்ளது. இதில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பெயர் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா, கங்குலியிடம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இத்தகவலை டால்மியாவும், கங்குலியும் மறுத்துள்ளனர். பிசிசிஐ அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘பயிற்சியாளர் பதவிக்கு கங்குலியின் பெயர் முதலிடத்தில் உள்ளது. அவர் இல்லாவிட்டால் ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம்’ என்றும் கூறுகின்றனர். வரும் 25ம் தேதி நடக்க உள்ள பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.