ஜெயலலிதாவின் ஜாமீன் மே 12ம் தேதி வரை நீடிப்பு !

 

supreme_court_scba

jaya2

 

 

 

 

 

 

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை மே 12ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் வரை ஜாமீன் தொடரும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

 தலைமை நீதிபதி எச்.எல்.தத்து , நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு கடந்த அக்டோபர் 18ம் தேதி உச்சநீதிமன்றம் 2 மாதம் ஜாமீன் வழங்கியிருந்தது. 2 மாதம் முடிந்ததும் மீண்டும் டிசம்பர் 18ம் தேதியிலிருந்து 4 மாத காலம் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது.

  ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் இவர்களது ஜாமீனும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட மேற்கண்ட மூவருக்கும்  4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 இந்நிலையில் டிசம்பர் 18ல் வழங்கப்பட் ஜாமீன் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஜெயலலிதாவின் ஜாமீனை நீட்டிக்க கோரிய மனு விசாரணைக்கு வந்தது. தற்போது மே 12ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்புக் கூற நீதிபதி குமாரசாமிக்கு மே 12ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.