மீண்டும் யாழ் மாவட்ட முஸ்லீம் பிரதிநிதித்துவததை தமிழ் கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டுகோள் !

asd
பாறுக் ஷிஹான்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாழ் முஸ்லிம் மக்கள்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மிகவும் எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றார்கள்.ஏனெனில்  கடந்த கால போராட்ட தேசிய தலைமையினால் வழங்கப்பட்ட முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இம்முறையாவது தருவார்களா என்ற ஆதங்கத்துடன கூட்டமைப்பின் நடவடிக்கையை எதிர்பார்த்து;
 
 இம்மாவட்ட முஸ்லீம் பிரதிநிதிகள் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர் எனவும் தற்போதைய தேர்தலில் தமிழ் தேசிய தலைமை முஸ்லிம் மக்களிற்கு ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வர வேண்டும் என யாழ் மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் புத்திஜீவிகள்,அரசியல் பிரதிநிதிகள்,பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள்,உலமாக்கள் வேண்டுகொள் விடுக்கின்றனர்.
 இவ்வாறு யாழ் மாவட்டத்தில் அம்மக்களிற்கான அப்பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய தலைமையினால் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் ஏனைய கட்சிகளில் போட்டியிட  எதிர்பார்த்துள்ள அரசியல் பிரதிநிதிகளை ஒன்று படுத்தி குறித்த பிரதிநிதித்துவத்தை மட்டும் பெறுவதற்கு பாடுபட போவதாக அத்தரப்பினர்  சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
 இதற்காக தமிழ் தேசிய தலைமையை சந்திப்பதற்கு காத்திருப்பதாகவும் அத்துடன்  கூட்டமைப்பின் அழைப்பிற்கு தாம் ஆவலாக உள்ளமையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய தலைமையானது யாழ் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வழங்க தமது கூட்டமைப்பு தேர்தல் வேட்பாளராகவோ அல்லது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவோ ஒருவரை  அறிவிக்கும் என பொதுமக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
 ஏனெனில் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கு, நடவடிக்கையானது முஸ்லீம் மக்களைஅரவணைத்து செல்லும் பாணியில் அமைந்துள்ளது.இதற்கு அதன் கடந்த கால போராட்ட வரலாற்றில் நடைபெற்ற முக்கிய சம்பவம் முக்கியமானதாகும்.முஸ்லீம்களும எமது உறவு என்பதை போராட்ட தலைமை(வேலுப்பிள்ளை பிரபாகரன்) ஏற்று இருந்த காலம் அது.
 இதற்காக 2008 ஆண்டு ஜனாப் சட்டத்தரணி  கே.எம் இமாம் என்பவரை  தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக  அத் தேசிய தலைமை நியமித்தமை  இங்கு கூட்டிக்காட்ட  வேண்டியுள்ளது.இப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுமையானது முஸ்லீம்களின் உதவியை உணர்ந்தே அக்காலம்  வழங்கப்பட்டது. இச்செயற்பாடானது  அனைத்து வட மாகாண முஸ்லீம் மக்களையும் கௌரவப்படுத்தியமையாகுமஅதுவும்.
 இந்;நியமனம் வன்னிக்கு அழைக்கப்பட்டு சட்டத்தரணி இமாமுக்கு வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த கால தவறுகளை(1990 ஆண்டு நடைபெற்ற வெளியேற்றம்) உணர்ந்த தாம் முஸ்லீம் மக்களின்றி சிறுபான்மை தொடர்பான விடயங்களை தீர்க்க முடியாது என்பதை அறிந்து வழங்கியதாக அத்தலைமை  அதன் செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது.
ஆனால் இதனை தொடர்ந்து; பிறகு வந்த பாராளுமன்ற தேர்தலில்(2010) தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலும் சந்தர்ப்பங்களினாலும் இந்நடைமுறை இல்லாமல் ஆக்கப்பட்டு முஸ்லீம் மக்களிற்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை அல்லது விடுபட்டுவிட்டது.
 இதன் காரணமாக மீண்டும் முஸ்லிம் தமிழ் மக்களிடையே இடைவெளிகள் ஏற்பட ஆரம்பமாகின.இது தமிழ் பேசும் மக்களிற்கு ஆரோக்கியமானதாக இருக்காது என பிரபல அரசியல் ஆய்வாளர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டினர்.ஏனெனில் தமிழ் முஸ்லீம் மக்கள்  சேர்ந்ததே தமிழ் சமூகம்.இதனை வேறுபடுத்த முடியாது.இலட்சியம் ஒன்றுக்காகவே இவ்விரண்டும்  பயணிக்கின்றது எனவும்  இவ்விருவரது  அபிலாஷைகளும் இணைந்து உருவாக்கப்பட்டால் தான் எதிலும் ; வெற்றி பெறலாம் ; என்ற காலகட்டமும் இருந்து வந்தது.
.இது வட மாகாணத்தில் மட்டுமல்ல இலங்கை பூராகவும் கடந்த காலத்திலும் இத்தமிழ் பேசும் மக்கள் இணைந்து ஆட்சியமைப்பதும் ,தேவையேற்படும் பட்சத்தில் அதனை மாற்றியமைத்தும் உள்ளனர்.இதனால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இக்கால சூழ்நிலை அறிந்து முஸ்லீம்களிற்கான தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவரை வழங்க நடவடிக்ககை எடுப்பது தலையாய கடமையாகிறது;.
இதனையே யாழ் மாவட்ட  சமூக ஆர்வலர்கள்,புத்திஜீவிகள்,பள்ளிவாசல் நிர்வாகம் போன்ற தரப்புகளும் தற்போது வலியுறுத்துகின்றனர்.அத்துடன் தமிழ் தேசிய அணுகுமுறையை இத்தேர்தலில்  எதிர்பாரத்த வண்ணம் உள்ளனர்.
இவ்வாறு 2015 ஆம் ஆண்டில் இப்பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய பட்டியல் உறுப்பினர் யாழ் மாவட்டத்திற்கு  வழங்கும் பட்சத்தில் ஏனைய கட்சியில் போட்டியிட தயாராக உள்ளவர்களை ஒட்டுமொத்தமாக கூட்டமைப்பிற்குள்  உள்வாங்கி தமிழ் தேசியத்தின் பால்  அவர்களை வரவழைக்க உதவியாக இச்செயற்பாடு அமையும்;.இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பினை அத்தரப்புகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். 
2010 ஆண்டு இப்பிரதிநிதித்துவத்தை வழங்கத் தவறிய போதிலும் ,தமிழ் பேசும் மக்கள் இன்றி உரிமைகளை அடைவது சாத்தியமற்றது என்பதை பின்னாளில் அவ்வரசியல் தலைமைகள் உணர்ந்தன.இதன் காரணமாக   2013 ஆண்டு வரலாற்று மிக்க வட மாகாண சபை தேர்தலில் தேசிய பட்டியல்(போனஸ்) ஆசனம் ஒன்றினை வழங்கி முஸ்லீம் பிரதிநிதித்துத்தை பெற்று கொடுத்து தமிழ் தேசியத்தின் பெருந்தன்மையை கூட்டமைப்பின் தலைமை காட்டியது.இதனை யாரும் மறுப்பதற்கில்லை.ஆனாலும் இத்தெரிவில் மக்கள் விரக்தியடைந்துடன் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடலின்றி இப்பிரதிநித்துவத்தை ; தேசிய தலைமை வழங்கியதாக குறிப்பிட்டனர்.
எனவே தான் இனியாவது; மக்களின் கருத்துக்களை அறிய அவர்கள் ; சார்ந்த சமூக அமைப்புகள் ,பள்ளிவாசல் தலைவர்கள்,மௌலவிமார்களுடன் கலந்துரையாடி தகுந்த ஒருவரை தெரிவு செய்வதன் ஊடாக  தமிழ் பேசும் மக்களின் உறவு பலமடையும்.அத்துடன் மாகாண சபை உறுப்பினர் விடயத்தில் விட்ட தவறை செய்யாமல இம்முறை  இப்பாராளுமன்ற  தேர்தலில் முஸ்லீம் உறுப்பினர்  தெரிவில் மக்களின் விருப்புடன் கூடிய கலந்துரையாடலில் கூட்டமைப்பின் தலைமை  அக்கறை செலுத்த வேண்டும்.
தற்போது இத்தேர்தல் நாள் செல்ல செல்ல  சூடுபிடித்துள்ளதை அடுத்து  ஏனைய கட்சிகள் யாழ் முஸ்லீம் மக்களை கூட்டமைப்புடனான  உறவில் இருந்து பிரிக்க முயற்சி செய்கின்றன.இதற்கு சில ஊடகங்களும் உதவுவதை  காண முடிகின்றது.எனவே பல கட்சிகளில் யாழ் முஸ்லீம்கள் போட்டியிட தயாராக இருக்கின்றார்கள் என தகவலை அவைகள் தற்போது  வெளியிட்டு வருகின்றன.
இதனை கூடட்மைப்பின் தலைமை ஆராயாமல் இருப்பதை பார்த்து யாழ் முஸ்லிம் ;மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஏனெனில் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தே தொடர்ந்தும் பயணிக்க விரும்புகின்றனர்.இதனால் தான் ஏனைய கட்சிகளிடம் இருந்து வந்த அழைப்புகளை தவிர்த்து வருகின்றனர். கூட்டமைப்பின் நடவடிக்கை பார்த்து தான் ஏனைய முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களை கைவிடாது என  அவர்கள் திடமாக நம்புகின்றனர்.ஏங்குகின்றார்கள் !!