நாட்டுக்குத் தேவை நல்லாட்சியா அல்லது நஞ்சாட்சியா என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டுமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த விடயம் குறித்து மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது சுயலாபங்களை மட்டும் கருத்திற் கொண்டு இம்முறை பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்கால சந்ததியினரையும் கருத்திற் கொண்டு இம்முறை தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் சாதாரண பொதுமகனை மன்னராக்க முயற்சிப்பதாகவும், நஞ்சாட்சி அரசாங்கம் குடும்பத்தையும் சுற்றத்தையும் போசிக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதாகவும் அதன் ஊடாக பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.