சுலைமான் றாபி
நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பினர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று (01.07.2015) நிந்தவூர் அதான் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
ஒழுங்கமைப்பின் தலைவரும், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகருமான ஐ.எல். இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இவ் இப்தார் நிகழ்விற்கு நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எல்.எம். சலீம் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், விளையாட்டுக்கழங்களின் உறுப்பினர்கள் மற்றும் நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பின் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.