ஊடக பிரிவினர் (NDPHR)
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் மத்தியமுகாம்,நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளராக நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த கலைத்துறை இளமாணி பட்டதாரி தாஹிர் முஹம்மது சபீர் நியமிக்கபட்டுள்ளார்.
இவர் இலங்கை முழுவதும் 1.5 லட்சத்திற்கும் மேலான அங்கத்தவர்களை கொண்ட அல் -மீசான் அறக்கட்டளையின் கல்விப்பிரிவுக்கான பிரதி அமைப்பாளராக அப்பிரதேச கல்வி,சமுக மேம்பாட்டுக்காக உழைத்து வரும் இளம் சமுதாயத்தின் முன்னோடிகளில் ஒருவராவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசிய ஜனநாயக கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு ஊடாக தமது அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டதுடன் எதிர்வரும் காலங்களில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் மத்தியமுகாம்,நாவிதன்வெளி பிரதேச விஸ்தரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.