நூர்
அண்மைகாலமாக அதிக வளர்ச்சியை கண்டு வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இம்முறை தமது பலத்தை திகாமடுல்லயில் பரீட்சிக்க முன்வந்துள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா? இல்லை பெரும்பான்மை கட்சிகளுடன்இணைந்து போட்டியிடுவதா? என்பது பற்றிய முடிவு இது வரை எட்டப்படாத நிலையில் அமபாரை மாவட்டத்தில் வேட்பாளர்களாக யாரை நிறுத்த போகிறது என்பது மட்டும் கசிய ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் கல்முனை தொகுதியில் கல்முனை மாநகர முதல்வராக இருந்த சிராஸ் மீரசஹிபையும் , சம்மாந்துறை தொகுதியில் கட்சியின் அதிஉயர் பீட உறுப்பினரும் ,சர்வதேச விடய பணிப்பாளருமான அன்வர் எம் முஸ்தபா வையும் நிறுத்த கட்சி 100% முடிவை எட்டியுள்ளதுடன் .மேலும் யார் ? யாரை நிறுத்துவது என்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐ.தே.கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அன்வர் முஸ்தபாவும்,சிராஸ் மீரசாஹிபும் கட்சியின் சார்பில் களமிறக்கப்படுவர் என்றும்.கட்சி தனித்து போட்டியிட்டால் மேற்சொன்ன இருவருடன் மேலும் பலரும் இணைந்து கட்சியின் மயில் சின்னத்தில் களமிறக்க பட தலைமை திட்டம் தீட்டி வருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் அறிய முடிகிறது.
முஸ்லிம் காங்கிரசை ஐ.தே.கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட செய்ய ஐ.தே.கட்சி அம்பாறை மாவட்ட பிரமுகர்கள் தமது அதிருப்தியை தெரிவித்து வருவதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு பச்சை கொடி காட்டியுள்ளனர்.எது எப்படியாக இருந்தாலும் அமைச்சர் ரிசாத் தனது கட்சியை தனியாக போட்டியில் கலந்து கொள்ள செய்ய ஆவலுடன் இருப்பது மட்டும் உண்மையே..
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2 ஆசனங்களை கைப்பற்றும் நோக்கில் தமது கட்சியின் சார்பில் மிக அதிக சக்தி வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்த போவது மட்டும் உண்மையே…. சிராஸ் ,அன்வர் மற்றும் பலரும் இணைந்து போட்டிக்கு தயாராகிவருவது தெளிவாக தெரிகிறது.கடந்த பல மாதங்களாக அம்பாறை மாவட்டத்தில் சிட்டாக பறந்து சகல சந்து பொந்துகளிலும் தமக்கான ஆதரை திரட்டியுள்ள அன்வர் எம் முஸ்தபா மற்றும் 45 நாட்களில் அரசியலில் புகுந்து முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்களுக்கு தண்ணி காட்டிய சிராஸ் மீராசாஹிப் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தற்போது பலமான எழுச்சியை நோக்கி நகர்கிறது ……. பொறுத்திருந்து பார்போம் எது நடக்கிறது என ..