எம்.என்.எம்.யஸீர் அறபாத்
அலை அடித்து ஓய்ந்தது போன்றே ஒரு நிம்மதி
20வது தேர்தல் திருத்ததின் ஊடாக சிறிய,சிறுபாண்மை கட்சிகளின் பாராளுமன்ற
பிரதிநிதித்துவதில் ஏற்பட இருந்த அநிதியை முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப்
ஹக்கீம் அவர்கள் சிறிய,சிறுபாண்மை கட்சிகளை இணைத்துகொண்டு எதிர்ததன்
விளைவாக அதனை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட அரசாங்கம்
பாராளுமன்றதை அந்த சட்டமூலத்தை நிறைவேற்றாமேலே கழைத்துவிட்டது.
இது சற்று முஸ்லிம்களுக்கு ஆர்தலாக அமைந்தாலும் எதிர்காலத்தில் அமைய
இருக்கும் பாராளுமன்றம் ஒரு சவாலாக காணப்படலாம் என்றும் எதிர் பார்கப்
படுகிறது.
ஏனனில் இப்போது நிறைவேற்ற முடியாது போன 20வது திருத்த சட்டமூலத்தை அமையே
இருக்கும் பாராளுமன்றதில் நிறைவேற்ற முயற்சிப்பார்கள் அது மாதிரம் இல்லை
அமையே இருக்கும் பாராளுமன்றதில் பல அணிகள் இருக்கும் குறிப்பாக
முஸ்லிம்களின் மீது விரோத போக்கு கொண்ட இனவாத அணிகள் முஸ்லிம்களுக்கு
சவாலாக அமையலாம்.
அமைய இருக்கும் பாராளுமன்றதின் ஊடாக புதிய அரசியல் அமைப்பு
ஏற்படுத்தபட்டு இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் என்ற
நிலைபாடும் காணப்படுகிறது.
இதை உணர்நத தமிழ் சமூகம் தாங்கள் ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்
கொள்வதற்காக ஒன்று பட்டு அதிகலவான பாராளுமன்ற ஆசனங்களை தமிழ் தேசிய
கூட்டமைப்பு ஊடக பெற்றுக் கொண்டு அதனை நோக்கி பயணிக்கும் என்பது உறுதி.
முஸ்லிம் சமூகம் என்ன செய்யப் போகிறது?
அமையே இருக்கும் பாராளுமன்றத்திற்கு முஸ்லிம்கள் தங்களுக்காக குரல்
கொடுகின்ற கடந்த காலங்களில் தாங்கள் எதிர் நோக்கியே பிரச்சனைகளின் போது
தேசியதிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுது காத்திரமான பணிகளை
முன்னேடுத்தும் முன்னேடுத்துக் கொண்டிருக்கும் நம் சமூக இயக்கமான பல
உயிர் தியாகதில் வளர்ந்த சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ்ஸையும் அதன்
தலைமையையும் வரும் தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஒற்றுமை பட்டு ஆதரிப்பதன்
ஊடாக அதோடு அந்த கட்சிக்கு சமூக நோக்கம் கொண்டவர்களை உறுப்பனர்களாக
தேரிவு செய்து அனுப்வதன் மூலமும்
பாராளுமன்றதில் நம் சமூகம் எதிர் நோக்க இருக்கும் சவால்களை,இனவாத
செயற்பாடுகளை அதே போல் அரசியல் அமைப்பு திருத்தத்தின் போது நமது உரமைகளை
பேரினவாதம் பரிக்கமலும் தீர்வு திட்டதின் போது நமது பங்கை செரியாக பெற்று
நமது எதிர்கால சந்ததிகளை நிம்மதியாக வாழ வழியேற்படுத்தபோரமா?
அல்லது இவைகளை கருத்தில் கொள்ளாது தனிபட்ட நலன்களுக்கு முக்கியத்துவம்
கொடுத்து அற்ப சொற்ப இலாபங்களுக்ககவும் சிலரை திருப்தி படுத்தவும்
அவர்களுக்கு அதிகாரத்தை பெற்று கொடுப்பதற்காகவும் ஊருக்கு பிரதிநிதி
என்றே கோசங்களுக்காகவும் எதிர் வரக்கூடிய தேர்தலை முஸ்லிம் சமூகம் பயன்
படுத்தி வாக்குகளை நான்கு ஐந்தாக பிரித்து முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்களை குறைப்பதன் ஊடாக அமையே இருக்கும் பாராளுமன்றதில் நமது
குரலான முஸ்லிம் காங்ரஸ்ஸை பலமிலக்க செய்வதன் மூலம் நாம் பலம் இலந்து
நமக்கு எதிரான சவால்களை முறியடிக்க முடியாமே உரிமைகளை இழந்து அவர்கள்
வைக்கும் தீர்வுத் திட்டதில் நமது பங்கை செரியாக கேட்டு பேராம எதிர்கால
சந்ததிகளை நிர்கதிக்குல் ஆக்க போரமா?
என்பதை சமூகம் என்ற அடிபடையில் சிந்தித்து நமது பேரியக்கமான சிறிலங்கா
முஸ்லிம் காங்ரஸ்ஸை பலப்படுத்தி உரிமைகளை உரிய நேரத்தில் வேண்றிட
ஒன்றினைந்து வாரீர் சமூகமே!