பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் போட்­டி­யிட சந்திரிக்கா தீர்மானம் !

chandrika-k-asian-tribune

பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் போட்­டி­யிட முன்னாள் ஜனாதி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க நேற்று அவ­ச­ர­மாக தீர்­மா­னித்­துள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.
முன்னாள் ஜனா­தி­ப­தியின் இந்த தீர்­மா­னத்தை அவ­ரது செய­லாளர் பீ.திஸா­நா­யக்­கவும் உறு­திப்­ப­டுத்­திய நிலையில், அவர் கம்­பஹா மாவட்­டத்தில் இருந்து போட்­டி­யி­டலாம் எனவும் அது தொடர்­பி­லான அறி­விப்பை விரைவில் வெளி­யி­டுவார் என தாம் எதிர்ப்­பார்ப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.

மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியில் வேட்பு மனு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக பர­விய செய்­தி­களை அடுத்து முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவும் போட்­டி­யிட தீர்­மா­னித்­த­தாக அர­சியல் தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின. எவ்­வா­றா­யினும் இந்த முடிவு குறித்து கருத்து வெளி­யிட்ட முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­காவின் செய­லாளர் பீ.திஸா­நா­யக்க,
தற்­போ­துள்ள நிலை­மையில் சந்­தி­ரிக்கா அம்­மை­யா­ருக்கு பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­மாறு பல­மான கோரிக்கை உள்­ளது. எனினும் அவர் அதனை இன்னும் ஏற்­க­வில்லை. தான் செயற்­பாட்டு அர­சி­யலை கைவிட்­டு­விட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டுள்ள நிலை­யி­லேயெ இதனை நாம் குறிப்­பி­டு­கின்றோம்.

எனினும் தோல்­வி­ய­டைந்த அபேட்­சகர் ஒருவர் கள­மி­றங்­கு­வ­தானால் அவர் தனக்­குள்ள வாக்குப் பலத்தை காரணம் காட்­டு­வ­தாக இருந்தால் 1994 ஆம் ஆண்டு சந்­தி­ரிக்­கா­வுக்கு 63 வீத­மான மக்கள் ஆணை உள்­ளது. அத்­துடன் அவர் தோல்­வி­ய­டை­ய­வில்லை. தோல்­வி­ய­டை­ஒ­யா­தவர். அதனால் அவ­ருக்கு போட்­டி­யிட பூரண உரிமை உண்டு. இந்த கட்சி அவ­ரது தந்­தையால் உரு­வாக்­கப்­பட்­டது. அதனைப் பாது­காக்­கு­மாறு பலரும் அழைப்பு விடுக்­கின்­றனர். இந் நிலையில் அவர் தேர்­தலில் கள­மி­றங்­குவார். இதனை நான் பொறுப்­புடன் கூரு­கின்றேன்.

அவர் பெரும்­பாலும் கம்­பஹா மாவட்­டத்­தி­லேயே கள­மி­றங்­குவார். எனினும் தற்­போ­தைக்கு அதனை வெளி­யிட வேண்­டிய அவ­சியம் இல்லை. சுதந்­திர கட்சிஇ ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­பி­லேயே அவர் கள­மி­றங்கு8வார். தோல்­வி­ய­டைந்த ஒரு­வரின் வாக்குப் பலத்தைக் காட்டி அவரை கள­மி­றக்­கினல் அதனை விட தோல்­வி­ய­டை­யாத முன்னள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­கா­வுக்­குள்ள மக்கள் ஆணை மிக முக்கியமானது. அவருக்கு எதிராக எந்த குற்றச் சாட்டுக்களும் இல்லை. அப்படியானால் அவர் மிகவும் தகுதியானவர். அதன்படி அவர் போட்டியிடுவது குறித்து மிக விரைவில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கின்றேன். என்றார்.