நான் கட்சி மாறவில்லை ;சிறந்த கட்சியினை தெரிவு செய்து கொள்கிறேன் -நெளசாட் மஜீட்

கவர்பொட்டோ_Fotor

 அஹமட் இர்ஸாட்

(வீடியோ நெளசாட் மஜீடுடனான நேர்காணல்:-

youtube.com/watch?v=-ssGDXYbdPk&feature=youtu.be

கட்சிகள் மக்களுக்காகவே இருக்கின்றது. கட்சிகளுக்கு அடிமைப்பட்டு அரசிய செய்யும் முதுகெலும்பற்ற அரசியல் வாதியாக நான் இருக்க விரும்பவில்லை.  நான் ஒரு போதும் கட்சி மாறவில்லை. காலத்தின் தேவையினை கருத்தில் கொண்டும், மக்களுக்கு சிறந்த அரசியல் பணியினை செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காவுமே  சிறந்த கட்சியினை தெரிவு செய்து கொள்கின்றேன் என முன்னாள் சம்மாந்துரை பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளருமான நெளசாட் மஜீட் நேர்காணலின் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவருடனன விரிவான நேர்காணலின் விலாவாரியான விளக்கமும் காணொளியும் இங்கே பதி வேற்றம்செய்யப்பட்டுள்ளது.

அஹமட் இர்ஸாட்:- சம்மாந்துறையில் முக்கிய புள்ளியாக அரசியல் ரீதியாக இருக்கும் நீங்கள் திடீரென அசாட் சாலியினுடைய கட்சியான தேசிய ஐக்கிய முன்னணியில் இணைந்துள்ளமைக்கான காரணம் என்ன?

நெளசாட் மஜீட்:- 1989ம் ஆண்டு நான் அரசியலில் பிரவேசித்தும் 2000ம் ஆண்டில் இருந்துதான் அரசியல் வட்டத்தினை உருவாக்கிக் கொண்டேன். அந்த காலத்திலே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அதன் உதவி செயலாளராக செயற்பட்டு அதன் பின் 2001ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய தேசியக் கட்சியும் செய்து கொண்ட உடண்படிக்கையானது முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என்ற வகையில் என் தலைமையில் சுயற்சை குழுவினை உருவாக்கி சரித்திரம் படைத்தோம். அந்த வகையில் காலத்துக் காலம் சமூகத்துக்கு எது சரி என தென்படுக்கின்றதோ அதற்கேற்ப எனது அரசியல் களத்தினை அமைத்துக் கொள்ளும் தைரியம் படைத்தவன் நான் . அதனால்தான் 2010ம் ஆண்டு சுதந்திரக் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு சுதந்திரக் கட்சியின் அணித்தலைவராக சம்மாந்துரை பிரதேச சபையினை சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சரித்திரத்தில் முதல் தடைவையாக கிழ்க்கில் ஆகக் கூடிய விருப்பு வாக்குகளோடு கைப்பற்றினோம். அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச சபையினை நல்லாட்சியின் சின்னமாக திகழக்கூடிய வகையில் எனது நான்கு வருட பிரதேசபை தவிசாளர் பதவியினை வைத்து நாட்டில் எங்கும் இல்லாத ஒரு பிரதேச சபையாக மாற்றியமைத்தேன்.

அதன் பின் அவ்வாறு இருக்கும் காலத்தில் இன்று முஸ்லிம்களின் குரலாகவும், குரல் அற்ற மக்களின் குரலாகவும் திகழும் என் சகோதரர் அசாட் சாலி அவர்களின் அரசியல் பயணத்தில் தானும் ஒரு பங்காளியாக வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டும், இன்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியானது இரண்டாக பிளவுபட்டு தத்தளித்து கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுக்கின்ற சந்தர்பத்தில் முஸ்லிம்களுக்கு பலமான குரல் கொடுக்கக் கூடிய அரசியல் கட்சியின் தேவைப்பாடு உணரப்பட்டுள்ள நிலையினை கருத்தில் கொண்டே நான் எனது நண்பனான அசாட் சாலியினுடைய தேசிய ஐக்கிய முன்னணியின் உறுப்பினராகவும் அதன் தேசிய அமைபாளர் பதவியினை ஏற்றுக்கொண்டும், பாராளுமன்ற பிரதி நிதித்துவத்துக்கு அப்பால் சிந்தித்து இன்னாசா அல்லாஹ் அந்த முடிவுகளின் விளைவுகளை நாட்டுக்கும் சமூகத்துக்கும் சிறந்த அரசியலை செய்யமுடியும் என்பதை எடுத்துக்காட்டலாம் என என்னியுள்ளேன்.

அஹமட் இர்ஸாட்:- அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற தேர்தல் தொகுதிகளில் அதிகப்படியான வாக்குகளை சம்மாந்துறை தேர்தல் தொகுதியானது வைத்திருந்தும் ஏன் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை அன்மைக்காலமாக பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது?

நெளசாட் மஜீட்:- இதனை அரசியல் ஆய்வுக்கு உட்படுத்தினால் மர்ஹூம் எம்.ஏ.எம்.அப்துல் மஜீட் எனபடுபவரின் தனிமனித ஆட்சியில் 34வருடங்கள் சம்மாந்துறை தேர்தல் தொகுதியானது இருந்து வந்தது. 1994ம் ஆண்டிலிருந்து அது முஸ்லிம் காங்கிரசின் கைக்கு மாறியது. அன்றிலிருந்து இன்று வரை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறையை பிரித்தாழ்ந்து ஆட்சி செய்ததைத் தவிர முஸ்லிம் காங்கிரசினால் சம்மாந்துறைக்கு அரசியல் தலைமைத்துவம் உறுவாக்கப்பட வில்லை என்பதுதான் நீங்கள் தொடுத்த கேள்விக்கான பிரதானமான விடையாகும். வாக்கு பலத்தினையுடைய சம்மாந்துறை பிரதேசத்தினை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலகீனமாக்கியது மட்டுமல்லாமல் அரசியல் அனதையாக்கி பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினையும் இல்லாமல் செய்துவருவதற்கான முழுப் பொறுபினை முஸ்லிம் காங்கிரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அஹமட் இர்ஸாட்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தன் பொறுப்பேற்க வேண்டும் என்றால் மர்ஹூம் அஸ்ரப் மீதும் குற்றம் சுமத்துக்கின்றீர்களா?

நெளசாட் மஜீட்:- நிச்சயமாக இல்லை. மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபினுடைய காலத்துக்கு பின்புதான் இந்த நாடகம் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக 2004ம் ஆண்டு தேர்தலில் மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் முஸ்லிம் காங்கிரசினை விட்டு வெளியேறி பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் தேர்தலில் போட்டியிட்ட பொழுது நானும் தற்போதைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான மன்சூரும் வேட்பாளராக முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்டோம். அந்த தேர்தலில் எனக்கு கிடைக்க வேண்டிய தேசியப் பட்டியல் நியமணம் தலைவர் ரவூப்ஹக்கீமினால் கொடுத்த வாக்குறுதிப்படி நிறைவேற்றப் பட்டிருந்தால் சம்மாந்துறையின் பிரதி நிதித்துவம் தொடர்ந்து இன்று வ வரைக்கும் பாதுக்காக்கபட்டு வந்திருக்கும். அந்த பயணத்தை இல்லாதொழித்தது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையுமேயாகும். 

அஹமட் இர்ஸாட்:- அன்மைக்காலமாக் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் அம்பாறை மாவட்டத்தில் பல கட்சிகளின் ஊடுறுவல்கள் அதிகமாக காணப்படுவதாக அறியக் கிடைக்கின்றது. அந்த வகையில் வருக்கின்ற பொதுத்தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கெதிராக எல்லா கட்சிகளும் ஒன்றினைந்து தேர்தலில் களமிறங்கப் போகின்றீர்களா? அல்லது தனித்துப் போட்டியிடப் போகின்றீர்களா?

நெளசாட் மஜீட்:- தேசியக் ஐக்கிய முன்னணியின் குறிக்கோளானது எந்த கட்சிக்கும் எதிராக அரசியல் செய்வதல்ல. மாறாக இன்று அம்பாறை மாவட்டத்தில் அரசியல் களத்தில் இறங்கியிருப்பவர்கள் எல்லோரும் ஒரு குட்டையில் ஊரிய மட்டைகளாகும். எல்லோரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஊடாக அரசியல் முகவரியினை பெற்றவர்களே. முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வங்கியினை வைத்து தேர்தலில் குதித்தவர்கள் ஒழியே அவர்களுடைய வாக்கு வங்கியினை முஸ்லிம் காங்கிரசுக்கு கொடுத்தவர்கள் என கூற முடியாது. மாறாக நான் எனது வாக்கு வங்கியினை அல்லது எனது மூதாதையினரின் செல்வாக்கினை வைத்து அரசியலுக்கு வந்தவன். கட்சியினை வாக்கு வங்கியினை வைத்து நான் அரசியல் செய்யவில்லை. இவர்கள் எல்லோரும் அரசியலை தொழிலாக செய்கின்றார்கள். இவர்களுக்கு இவர்கள்தான் அரசியல் தலைவர்கள் என நினைக்கின்றார்கள். இதுதான் என்னுடைய நிலைப்பாடக உள்ளது.

அஹமட் இர்ஸாட்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பம் அம்பாறை மாவட்டம் என்ற நிலையில் அன்மையில் கிழக்கு மாகான முதலமைச்சு பதவியானது அம்பாறை மவட்டத்துக்கு வெளியில் கொடுக்கப்பட்டமையினை நீங்கள் எந்தக் கோணத்தில் பார்க்கின்றீர்கள்?

நெளசாட் மஜீட்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உதயமானது பிரதேச வாதம் ஒழிக்கப்பட்ட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே உறுவாக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் அம்பாறை மாவட்டத்துக்குத்தான் சொந்தமானவர் என பார்க்காமல் அந்தக் குழுவில் யார் தகுதியுடையவரோ அவருக்கே அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் நான் ஒரே கருதுடன் இருக்கின்றேன். இன்று கிழக்கு மாகாண சபையில் இருக்கும் பிரதிநிதிகளை பார்க்கின்ற பொழுது அல்-ஹாஜ் ஹாபிஸ் நசீர் அஹமட் முதலமைச்சு பதவியினை வகிப்பதற்கு தகுதியானவர் என்பது எனது நிலைப்பாடாகும்.

அஹமட் இர்ஸாட்:- சம்மாந்துறை பிரதேசத்துக்கு அரசியல் ரீதியாக எவராலும் செய்து கொடுக்கப்படாத அபிவிருத்தியினை தான் செய்து கொடுக்க வேண்டும் என எதனை நீங்கள் உங்களுடைய இலட்சியமாக கொண்டுள்ளீர்கள்?

நெளசாட் மஜீட்:- சம்மாந்துறையானது 1948ம் ஆண்டு நகர சபையாக இருந்தது. இன்று 2015ம் ஆண்டும் அது பிரதேச சபையாக இருந்து வருக்கின்றது. சம்மாந்துறையானது பரப்பளவிலும் சரி மக்கள் தொகையிலும் சரி பரந்துபட்டே காணப்படுக்கின்றது. ஆனால் சம்மாந்துறையினை நகர சபையாகவோ அல்லது மாநகர சபையாகவோ உயர்த்துவதற்கான முழுப்பிரதேசமும் காணப்படுவதில்லை. அந்த வகையில் அடிப்படை வசதிகளை உயர்த்துவதோடு நகர சபையாகவும் மாற்றி, சம்மாந்துறையின் முதுகெலும்பான விவசாயத்தினை நவீனமயப்படுத்தி கல்வியின் தரத்தினை உயர்த்துவதே எனது அரசியல் இல்ட்சியமாக கொண்டு நான் வாழ்ந்து வருக்கின்றேன்.

அஹமட் இர்ஸாட்:- கடும் பருவப்பேர்ச்சி மழைக்காலத்தின் பொழுது சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதேசத்துக்கு இடைப்பட்ட பகுதியனது பலவருடங்களாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்தானது இரண்டு மூன்று கிழமைகளுக்கு முற்றிலும் பாதிக்கப்படுக்கின்றது. அந்த வகையில் பிரதேசத்தின் அரசியல்வாதி என்ற வகையில் நீங்கள் என்ன நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளீர்கள்?

நெளசாட் மஜீட்:- உண்மையில் 2005ம் மற்றும் 2006ம் ஆண்டுகளில் பெருந் தெருக்கள் அபிவிருத்தி சேய்யப்பட்ட வேலையில் மாவடிப்பள்ளி பாலமும் அதனை அண்டியுள்ள காரைதீவு பாலமும் அகற்றபட்டிருக்க வேண்டும். இது பற்றிய விளக்கங்களை பாராளுமன்றத்திலும், ஜனாதிபதி மட்டத்திலும் பேசியிருந்ததன் படியினால் இன்று மாவடிப்பள்ளிக்கு இடைப்பட்ட பிரதேசமானது அபிவிருத்தி செய்யப்படுக்கின்றது. இன்சா அல்லாஹ் 2016ம் ஆண்டு பூர்த்தி அடையுமுன் இரண்டு பாலங்களும் புதிதாக அமைக்கப்படும் என்ற நம்பிக்கிக்கை எனக்கிருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:- சம்மாந்துறை ஆதாரா வைத்தியசாலையானது உள்ளூர் வைத்தியர்களை வைத்துக்கு கொண்டு தேசிய வைத்திய சலைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் வைத்தியப்துறையில் பல சாதனைகளை புரிந்து வருகின்றது. இதனை நீங்கள் பிரதேசத்தின் அரசியல்வாதி என்ற வகையில் எவ்வாறு பார்க்கின்றிர்கள்?

நெளசாட் மஜீட்:- சம்மாந்துரை வைத்தியசாலையானது உண்மையில் மாவட்ட வைத்தியசாலையாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் கல்முனையில் நிறுவிய அஸ்ரப் ஜாபகர்த்த வைத்தியசாலையானது சம்மாந்துரையிலேயே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன்னென்றால் அங்கு ஏற்கனவே கல்முனையில் கல்முனைக்குடி வைத்தியசாலை இருந்து வந்தது. அது அபபிவிருத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்மாந்துறை வைத்தியசாலையின் வளர்ச்சி கடந்த மூன்று வருடங்காளாக அபிவிருத்தி கண்டு வருக்கின்றது. அதற்கான முயற்சியானது மர்ஹும் அன்வர் இஸ்மாயிலாலே ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் தற்பொழுது சுகாதார அமைச்சராக உள்ள மன்சூரின் பங்களிப்பும் கூடுதலாக காணப்படுவதோடு வைத்தியர்களின் பாராட்டப்படக் கூடிய சேவையும் கூடுதலாக காணப்படுவதனால் கூடிய அபிவிருத்தியோடு வைத்திய துரையில் சாதனை படைக்கின்ற வைத்தியசாலையாக மாற்றமடைந்து வருவதானது பெருமைப்படக் கூடிய விடயமாக உள்ளது.

அஹமட் இர்ஸாட்:- சம்மாந்துறை பிரதேசத்துக்கான தூய குடிநீர் பிரச்சனை அதனோடு தொடர்புபட்ட ஏனைய அன்றாட தேவைகளுக்கான நீர் பிரச்சனை சம்பந்தமாக நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள்?

நெளசாட் மஜீட்:- இது சம்மாந்துரை பிரதேசத்தில் இருந்து வருக்கினற இயற்கையுடன் சேர்ந்த பாரிய பிரச்சனையாகும். இந்நீர் பிரச்சனையானது இன்சா அல்லாஹ் இவ்வருடத்துக்குள் நிறைவு பெறும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:- கடைசியாக வருக்கின்ற பொதுத்தேர்தல் சம்பந்தமாக நீங்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் சம்மாந்துறை மற்றும் அம்பாறை பிரதேச மக்களுக்கு எதைச் சொல்ல விரும்புக்கின்றீர்கள்?

நெளசாட் மஜீட்:- வருக்கின்ற பொதுத்தேர்தலில் நான் போட்டியிடுவதா அல்லது இல்லையா என்பதனை நான் தற்பொழுது இணைந்துள்ள கட்சிதான் தீர்மாணிக்க வேண்டும். என்னை பொறுத்தமட்டில் இன்றைய விகிதாசார தேர்தல் முறையில் அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்ல நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தேர்தல் களத்தில் பிரவேசிப்பதற்கு தனிப்பட்ட முறையில் விருப்பம் கிடையாது. ஆனால் சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகளால் நான் களமிறங்க வேண்டும் என்று ஒரு நிலை ஏற்பட்டால் நிச்சயமாக அதற்கு நான் தயக்கமடைய மாட்டேன் என்பதனை எனது மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.

546_Fotor