கே.பி.யை சட்­டத்தின் முன்­நி­றுத்தி விசா­ரணை செய்­யப்­பட வேண்டும்!

kumaran-pathmanathanவிடு­த­லைப்­பு­லிகள் சந்­தேக நபர்­களில் குற்­ற­மற்­ற­வர்­களை விடு­தலை செய்­யவும் குற்­ற­மி­ழைத்­தவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடர்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக முன்னாள் பிரதி அமைச்­சரும் எம்.பி.யுமான சுஜீவ சேன­சிங்க தெரி­வித்தார்.

 

கே.பி.யை சட்­டத்தின் முன்­நி­றுத்தி புலி­களின் பணம், நகைகள் தொடர்­பாக விசா­ரணை செய்­யப்­பட வேண்டும். அதற்­கான முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்க தயா­ராகி இருப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

பிட்­ட­கோட்டேயில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே முன்னாள் பிரதி அமைச்சர் சுஜீவ சேன­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

சிறை­யி­லுள்ள விடு­த­லைப்­புலி சந்­தேக நபர்கள் தொடர்­பாக தற்­போ­துள்ள எமது சட்ட வரை­ய­றை­க­ளுக்­குள்­ளேயே நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யுள்­ளது. எனவே தற்­போ­தைய சட்­டங்கள் திருத்­தப்­பட வேண்டும் அது மேம்­ப­டுத்தப் பட­வேண்டும்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் எல்­லோ­ரையும் பாது­காக்க மாட்டோம். விடு­த­லைப்­புலி சந்­தேக நபர்­களில் குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்­கல்­செய்­யப்­படும்.
அதே­வேளை குற்­ற­மி­ழைக்­கா­த­வர்­களை விடு­தலை செய்­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.

கே.பி. எங்­கி­ருக்­கின்றார்? புலி­களின் நகைகள், பணம், சொத்­துக்கள் தொடர்­பாக கே.பி.விசா­ரணை செய்யப்பட்ட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம் என்றும் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.