மகிந்த ராஜபக்ஸவுடன் அமைச்சர் றிஸாத் ஒட்டி உறவாடியதற்கான சான்று..!!


1013944_215688001953563_2031223247_n

 தான் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை போல் தன்னோடு இருந்த அனைவரும் திடீரென எதிரணிக்கு பாய்ந்து அசைக்க முடியாத பலத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸவினை ஆட்சியில் இருந்து தூக்கி வீசினார்கள்.அண்மையில் பேசிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ தன் வாழ் நாளில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி,அமைச்சர் ராஜித சேனாரத்ன,அமைச்சர் ரிஷாத் ஆகிய மூவரினை மறக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் றிஸாத்தினை முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு சுட்டிக் காட்டி இருப்பதானதை சிலர் அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் செய்த தியாகத்தின் வெளிப்பாடு எனக் குறிப்பிட்டுள்ளனர்.இவர் அவ்வளவு தூரம் மக்களினை ஒன்று கூட்டி போராடியவரா? இவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்தார்? இவரது பலம் என்ன? என்பதனை நன்கு சிந்தித்தால் சில தெளிவுகளினைப் பெற முடியும்.

மு.காவினை விட அ.இ.ம.காவிற்கு பலம் குறைவு என்பது வெளிப்படையானது.மக்களினை இலங்கை பூராகவும் ஒன்று கூட்டும் ஆற்றல் அ.இ.ம.காவிற்கு இல்லை.ஆனால்,மு.காவிற்கு உண்டு.இப்படியான மு.கைவினைக் குறிப்பிடாது அ.இ.ம.காவினை குறிப்பிட்டுள்ளதானது  மக்கள் பலத்திற்காக அல்ல என்பதை விளங்கலாம்.மேலும்,தெளிவாக விளங்குவதென்றால் ஜாதிக ஹெல உறுமய முன்னாள் ஜனாதிபதி இற்கு ஆதரவளித்திருந்தால் கூட நிலைமை மாறி இருக்கலாம்.

 இப்படியான கட்சியெல்லாம் குறிப்பிடாது அமைச்சர் றிஸாத்தினை குறிப்பிட்டுள்ளதானது அவர் கட்சி மாறி போராடினார் என்பதற்காக அல்ல.அவ்வாறு மக்கள் பலத்தினை ஒன்று கூட்டி தன்னை தோல்வியடையச் செய்து விட்டாரே எனக் கூற வேண்டுமாக இருந்தாக இவரினை விட தகுதியானவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

அமைச்சர் ஹக்கீமினைப் பொறுத்த மட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுடன் ஒரு நல்ல உறவினைப் பேணியவர் அல்ல.இது வரை நடந்த எத் தேர்தலிலும் மகிந்தவினை ஆதரித்தவரும் அல்ல.எப்போது வேண்டுமாலும் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.கா மாறலாம்  என்பதனை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ நன்கே அறிவார்.அமைச்சர் ஹக்கீமுடனான உறவுகள் ஒப்பந்தங்கள்,பேரம் பேசல் போன்றவற்றினை வைத்தே இருந்தது.

 எனவே,இதற்கமையவே மு.காவுடன் தனது உறவினையும் முன்னாள் ஜனாதிபதியும் அமைத்து வந்தார்.இதனால் இவர் மாறியது ஒன்றும் பெரிய விடயமல்ல.

ஆனால்,அமைச்சர் றிஸாத்தினைப் பொறுத்த மட்டில் இறுதி மட்டும் தனக்கு ஆதரவளிப்பர் என்ற மனோ நிலையில் தான் முன்னாள் ஜனாதிபதி இருந்தார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுடன் அமைச்சர் றிஸாத் அவ்வாறான உறவினைத் தான் பேணினார்.கேட்பாதையெல்லாம் கொடுத்தார்.இருதியாக தேசியப் பட்டியலினைக் கூட அ.இ.ம.காவிற்கு வழங்கி இருந்தார்.

 அமைச்சர் றிஸாத்துடன் எந்தளவு சிறந்த உறவு இருந்திருந்தால் அஸ்வரினை  இராஜினாமா செய்வித்து பாராளுமன்ற உறுப்பினராக அமீர் அலியினை நியமித்திருப்பார்? இவர்களிடையேயான உறவு ஒப்பந்தங்கள் மூலமோ,பேரம் பேசும் சக்திகள் மூலமோ அல்ல.இவர் அந்தக் கட்டடம் கட்டியுள்ளார்,இந்தக் கட்டடம் கட்டியுள்ளார் என்று போற்றுகின்றார்களே அனைத்தும் இந்த உறவினால் தான்.எனவே,கேட்பதையெல்லாம் கொடுத்து தான் வளர்த்த செல்லப் பிள்ளை தன்னை எதிர்த்து மிதித்தால் கோபம் வருமா இல்லையா?

வெளியே பள்ளி உடைப்பு பற்றி கொதிப்பது போன்று காட்டி உள்ளே கொதிக்க வேண்டியவரிடம் குனிந்து தான் சென்றுள்ளார்.தர்கா நகர் பற்றி எறிந்த போது முன்னாள் ஜனாதிபதி இடம் பணிந்து தான் சென்றுள்ளார் என்பதை தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் கூற்று தெளிவு படுத்துகிறது.

இவர் கட்சி மாறிய பிற் பாடு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடைகளில் முன்னால் ஜனாதிபதி பேசும் போது சொபின் பேக்குடன் வெளியேறி இன்று பணக்காராக உள்ளவரினை நாங்கள் ஆட்சி அமைத்தவுடன்  பாத்துக் கொள்வோம் என இவரினை மறைமுகமாக சுட்டிக் காட்டி இருந்தார்.இக் கூற்றினை தெளிவாக சிந்தித்து இவ்  இரு கூற்றுக்களிற்கும் முடிச்சு போட்டாலும் சிலதை விளங்கிக் கொள்ளல்லாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்