முஸ்லிம் காங்­கிரஸ் கட்சியின் அதி உயர்பீட அமர்வு மிக அவசரமாக கூட அறிவித்தல்!

 

காணிப் பிரச்சினைக்கு விசாரணை செய்ய விசேட செயலணி -அமைச்சர் ஹசனலியிடம் பிரதமர் ரணில் இணக்கம்

ஏ.எல்.எம்.நபார்டீன் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்சியின் அதி உயர்பீட அமர்வு எதிர்வரும் செவ்வாய்கிழமை (30) ஆம் திகதி மிக அவசரமாக கூடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ரீ.ஹசனலி சகல உயர்பீட உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார். 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் ஜுலை 6 திகதி முதல் 16 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்படவுள்ள நிலையிலேயே இந்த அவசர உயர்பீட கூட்டம் கூடவுள்ளதாகவும், எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி கூட்டுச் சேர்ந்து போட்­டி­யி­டு­வதா அல்லது தனித்துப் போட்­டி­யி­டு­வதா அப்படி கூட்டு சேர்ந்து போட்டியிடுவதாக இருந்தால்  எக்­கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வது என்­பது குறித்து அன்றைய தினம் கூடும் அர­சியல் அதி உயர்­பீ­டத்தில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளர் எம்.ரீ. ஹச­னலி மேலும் அறிவித்துள்ளார்.