கொடியூரான்
குடும்பத்தை முன்னிறுத்தும் ஆட்சியாளர்களிடமிருந்து
எஸ் எம் சபீஸ் விடுபட வேண்டும்
சூறா சபை வேண்டுகோள்
அக்கரைப்பற்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு குடும்ப ஆட்சி மேலோங்கி இருந்தது யாவரும் அறிந்த விடயமாகும்
அதாஉல்லா கட்சிக்காக பாடு பட்ட எல்லோரையும் ஒதுக்கி தனது மகனை முதல்வர் ஆக்குவதற்கு ஆடிய நாடகங்கள் மறக்க முடியாதவைகளாகும்
இதற்கு பிள்ளையார் சுழியாக மஹிந்த சாகும் வரை பதவியில் இருப்பார், நாம் நினைத்த மாதிரி எல்லாம் ஆட முடியும் என்ற பொய்க் கணக்கும் ஒரு காரணமாகும் .
இன்று நிலைமை மாறி உள்ளது. நாட்டில் குடும்ப ஆட்சி ஒழிக்கப் பட்டுள்ளது.
இதனை நன்கு அதாஉல்லா அறிந்திருந்தாலும் ,
பழைய குருடி கதவைத் திறடி என்று சொல்லுவது போல் மீண்டும் தன் மகனுக்கே பதவிகள் வந்து சேர வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் அதாஉல்லா.
இச் சூழ்சிக் காரர்களிடமிருந்து விடு படுவதற்கு நல்லதோர் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதனை எஸ். எம். சபீஸ் புரிந்தது கொள்ள வேண்டும். என்பதனை நினைவு படுத்த விரும்புகிறோம் .
குடும்ப ஆட்சியில் இருந்து விடுபட்டு நல்லாட்சியில் இணையுமாறு வேண்டிக் கொள்கிறோம்.