மஹிந்த போட்டியிடும் கூட்டமைப்பிலேயே தே.சு.மு.வும் இணைந்து போட்டியிடும் : விமல் !

wimal-weerawansa

 எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டாயம் போட்டியிடுவார் என்று தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, முன்னாள் ஜனாதிபதி போட்டியிடும் கூட்டமைப்பிலேயே தே.சு.மு.வும் இணைந்து போட்டியிடும் என்றும் குறிப்பிட்டார்.  

 கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய விமல், ‘ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் அக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுடன் கலந்துரையாடிய பின்னர் தீர்மானிப்பதாக’ குறிப்பிட்டார்.